Friday, 22 July 2016
ஆதி சக்தி
Sunday, 17 July 2016
ஆழ்மனம் Cure all
நாடும் நாட்டுமக்களும் நலமாக இருக்க பஞ்ச பூதங்களை வழிபாடு செய்திருக்கிறீர்களா நாடு நல்லாயிருந்தா நீங்களும் நல்லா இருப்பீர்கள் பெய்கின்ற மழை புரிந்து கொண்டு மந்திரத்தை சொல்லுவோம் அல்லது ப்ரார்த்தனை செய்வோம்
ஓம் ஜலபிம்பாய வித்மஹே
நீல புருஷாய தீமஹி
தந்நோஹ் வருணஹ் ப்ரசோதயாத்
உங்களால் முடிந்த அளவு சொல்லுங்கள் அலுவலகத்தில் இருந்தால் உணவு இடைவேளையில் தினந்தோறும் சொல்லுங்கள்
++++++++++++++++++++++++++++++++++
எந்த .வியாதியாக இருந்தாலும். . .
இரவு உறங்கச் செல்லும் முன் ..
உங்கள் கடைசி சிந்தனையில் ..
நான் ஆரோக்கியம் அடைந்து கொண்டு வருகிறேன் . என் உடல் . ..முன்பை விட புத்துணர்ச்சி அடைந்து வருகிறது. .
.
என்ற உணர்வுடன் ..நீங்கள் ....உறங்க ஆரம்பித்து ..விட்டால் .. .
உங்கள் ஆழ்மனம். நீங்கள் நினைத்ததை உண்மை என நம்பி . .பொழுது விடிவதற்க்குள் .....
உங்கள் உடலில் ஆரோக்கியத்தையும்
புத்துணர்வையும் ஏற்படுத்தி விடும். .
https://www.youtube.com/watch?v=mHzmdhDYD5A
https://www.youtube.com/watch?v=liZ3pUkxKTA
https://www.youtube.com/watch?v=9pivzY4DAaE&list=PL3MpdfjVlOHKn2fZxBXiJ35EKyHZquifP
Saturday, 16 July 2016
ரேணுகாதேவி
விதர்ப்ப தேசத்து அரசர் ஜராவதன். அவருடைய மகள் ரேணுகாதேவி. தன் மகளுக்கு நல்ல மணாளனைத் தேடிக்கொண்டு இருந்தார் அரசர். அப்போது ஒருநாள், ரேணுகாதேவிக்கு ஒரு அசரீரி குரல் கேட்டது, “ரேணுகாதேவி, நீ குண்டலிபுரத்தை நோக்கி செல். அங்கு ருத்ராவதாரம்கொண்ட ஜமதக்னி முனிவர் ஒருவர் இருப்பார். அவருக்கு பணிவிடை செய்து அவரையே உன் கணவராக ஏற்று கொள்.” என்றது அந்த அசரீரி. அதன்படி ரேணுகாதேவி அந்த முனிவரை கண்டறிந்து, அவருக்கு பணிவிடைகள் செய்து, பிறகு அந்த முனிவரையே திருமணம் செய்துக்கொண்டாள். இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தனர். அதில் ஒருவர்தான் பரசுராமன் .
அசுரனான கார்த்த வீரியன், ஜமதக்னி முனிவரை தரிசிக்க வந்தான். வந்தவன், முனிவர் வளர்த்து வந்த காரம்பசுவைக் கேட்டான். காரணம், “இந்த பசுவால்தான் முனிவர் செழுமையாக வாழ்கிறார், வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உணவு தருகிறார்” என்பதால் பசுவை அசுரன் தானமாக கேட்டான்.
அசுரன், முனிவரிடம் காரம்பசுவை கேட்க, ஜமதக்னி முனிவரோ பசுவை தர மறுத்தார். இதனால் கோபம் கொண்ட அசுரன், முனிவரை கொன்று அந்த பசுவை இழுத்து சென்றான்.
இதை கண்டு அதிர்ந்த ரேணுகாதேவி, தன் கணவரோடு உடன்கட்டை ஏற தீயில் குதித்தாள்.
வேப்பிலையை ஆடையாக அணிந்தாள்
ஆனால் விதிப்படி ரேணுகாதேவியின் ஆயுள் முடியவில்லை. இதனால் திடீரென மழை பொழிய ஆரம்பித்தது. அதனால் எரிந்துக்கொண்டிருந்த தீ அனைந்தது. ஆனாலும் ஆடை தீயில் கருகி போனது. ரேணுகாதேவியின் உடலும் தீயில் வெந்தது. உடல் முழுவதும் தீ கொப்பளங்கள். துடிதுடித்து போனாள்.
“வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் இப்படி அல்லல்படும் நிலை ஆகிவிட்டதே. எந்த ஜன்மத்தில் செய்த பாவம் இது?” என்று கலங்கி, உடல் தீயில் வெந்த வேதனையில் துடித்தாள். அத்துடன், உடுத்த ஆடை கூட இல்லையே என்று வருந்தி, யார் கண்ணிலும் படாமல் காட்டில் மறைந்து இருந்தாள்.
அந்த காட்டில் வேப்பமரங்கள் இருந்தது. அந்த வேப்பிலைகளை ஆடையாக உடுத்திக்கொண்டு, கால் போன போக்கில் நடந்தாள். பசியால் துவண்டாள்.
பல நாட்கள் சாப்பிட எதுவும் கிடைக்காமல் பசி மயக்கத்தில் ஒரு சேரியை அடைந்தாள் ரேணுகாதேவி. அங்கு இருந்த ஒரு பெண்மணியை பார்த்து, “சாப்பிட ஏதாவது கொடுங்கள், பசி உயிர் போகிறது”. என்றாள்.
வேப்பிலையே ஆடையாக அணிந்திருக்கும் ரேணுகாதேவியை பார்த்த சேரிமக்கள் தேவிக்கு உணவு தர பயந்தார்கள்.
“இந்த பெண்ணை பார்த்தால், உயர் குலத்தில் பிறந்தவள்போல் முக லட்சணமாக இருக்கிறாள். நாம் இந்த பெண்ணுக்கு சாப்பிட உணவை தந்தால் நமக்கோ அல்லது அந்த பெண்ணுக்கோ ஏதாவது தீங்கு நேர்ந்து விடுமோ” என்று பயந்தார்கள்.
அந்த சமயம், அந்த சேரியில் வசிக்கும் ஒரு பெரியவர், “பசி என்று வந்தவருக்கு உணவு தராமல் அனுப்புவது பெரிய பாவம். அதனால் இந்த பெண்ணுக்கு தயங்காமல் பச்சரிசி மாவு, வெல்லம் இளநீர், பானகம் கொடுங்கள்.” என்றார்.
சேரி மக்களும் அவ்வாறே உணவு தந்தனர். அந்த உணவை விரும்பி சாப்பிட்டு தன் பசியை போக்கிக் கொண்டாள் ரேணுகாதேவி.
சேரி மக்கள் கொடுத்த உணவை சாப்பிட்ட பிறகு, “இனி எங்கே செல்வது? என்று தெரியாமல் புறப்பட்டாள். அடுத்தாக, சலவை தொழிலாளர்கள் இருக்கும் பகுதிக்கு வந்தாள். இங்கு இருந்த சலவை தொழிலாளி ஒருவரின் மனைவி, ரேணுகாதேவிக்கு சேலை கொடுத்தாள்.
அந்த சேலையை உடுத்திக்கொண்டு சடலமாக இருக்கும் தன் கணவர் இருக்கும் இடத்திற்கே திரும்பி வந்தாள். தன் மகனான பரசுராமனிடம் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினாள் ரேணுகாதேவி.
இதை கேட்ட பரசுராமன் கோபமாக, “கார்த்த வீரியனைக் கொன்று, அவனோடு 21 தலைமுறையிலுள்ள ஷத்திரியர்களையும் பூண்டோடு அழிப்பேன்.” என்று விண்ணுலகம் அதிரும்படி சபதம் செய்தான் பரசுராமன்.
இதை கேட்ட தேவர்களும் – அசுரர்களும் பயந்தார்கள். பரசுராமனின் சபதம் விபரீதமாக முடியும் என அஞ்சிய அவர்கள், சிவபெருமானிடம் முறையிட்டர்கள்.
ரேணுகாதேவிக்கு சிவபெருமான் கொடுத்த வரம்?
சிவபெருமான், ஜமதக்னி முனிவரை உயிர் பெற செய்தார். அத்துடன் ரேணுகாதேவியை பார்த்து, “நீ சக்திதேவியின் அம்சம். உன்னை வணங்கும் பக்தர்களை காப்பாற்று. நீ அனுபவித்த தீகொப்பளங்கள் அம்மைக் கொப்பளங்களாகும். இதற்கு மருந்து நீ அணிந்த வேப்பிலைதான் இனி அம்மை கொப்பளங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருந்து.
உன் பசியை போக்கிய வெல்லம், பச்சரிசிமாவு, இளநீர்தான் இனி உனக்கு நிவேதனமாகும். இதை யார் உனக்கு படைத்து வணங்குகிறார்களோ, அவர்களின் துன்பங்கள் நீங்கும். நீயே முத்துமாரியம்மனாக பக்தர்களுக்கு அருள்பாலிப்பாய். உன் உடல் உன் கணவரோடு சொர்கத்திற்கு செல்லும். ஆனால் உன் தலை உன் பக்தர்களை காக்க சக்திதேவியின் பாதத்தின் கீழே இருக்கும்.” என்று சிவபெருமான், முத்துமாரியம்மன் என்கிற ரேணுகாதேவிக்கு வரம் தந்தார்.
பீடை விலகும் பரிகாரம் என்ன?
ஆடி மாதம் ரேணுகாதேவி என்ற முத்துமாரியம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமையில் இளநீர் அபிஷேகம் செய்யுங்கள்.
ஒருவேலை, உங்கள் வீட்டின் அருகில் முத்துமாரியம்மன் ஆலயம் இல்லை என்றால், சில அம்மன் ஆலயங்களில், அம்மன் பாதத்தின் கீழே ரேணுகாதேவியின் முகம் இருக்கும். அந்த அம்மனின் முகத்தை பார்த்து வணங்கி, அந்த அம்மன் மீது அணிவித்த வேப்பிலையை சிறிது வாங்கி பிரசாதமாக சாப்பிடுங்கள். அத்துடன் உங்கள் இல்லத்தில் இருக்கும் அம்மன் படத்தில் வைத்து வணங்குங்கள். தீராத கஷ்டங்களும் தீரும். உடல் பிணி நீங்கும்.
உங்கள் வீட்டின் பூஜை அறையிலோ அல்லது ஆலயத்திலோ வெல்லம், பச்சரிசிமாவு இந்த இரண்டையும் கலந்து மாவிளக்கு செய்து நெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள்.
ஆடி மாதத்தில் இந்த பரிகாரத்தை செய்தாலே வருடம் முழுவதும் நோய்நொடிகள் அண்டாமல் காப்பாள் முத்துமாரியம்மன். எடுக்கும் முயற்சி வெற்றி பெறவும், திருமண தடை நீங்கவும், சுபகாரியம் நடக்கவும், புத்திரபாக்கியம் கிடைக்கவும் அருள் செய்வாள் முத்து மாரியம்மன்!.
ஆதித்ய ஹ்ருதயம்
Friday, 15 July 2016
பிரபஞ்சம்
பிரபஞ்சம் உங்களிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறது. பிரபஞ்சமானது , மக்கள் , சம்பவங்கள் , சின்னங்கள் , சகுனங்கள் , கனவுகள் , இவைகள் மூலமாக உங்களிடம் பேசிக் கொண்டேதான் இருக்கிறது . சிலர் மட்டுமே அதன் குரலை கேட்கிறார்கள். நாம் எல்லோருமே அவ்வப் போது நடக்கும் பிரச்சனைகள் அல்லது பகல் கனவு காணுதல் அல்லது நமக்கு பிரபஞ்ச செய்தி சொன்னவரிடமே வாக்கு வாதம் செய்தல் இப்படி செய்து பிரபஞ்ச செய்திகிடைப்பதை தடுத்துக்கொள்கிறோம்! பிரபஞ்ச ஆற்றல் என்பது காஸ்மிக் கதிர்கள்தான் . இந்த காஸ்மிக் கதிர்கள் உலகில் மேலும் கீழும் பரந்து வியாபித்து சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறது. நமது எண்ண அலைகள் இந்த காஸ்மிக் அலைகளின் பிரபாவத்தில் சேர்ந்து ஆற்றல்களை அதிகப்படுத்துகிறது , நம் எண்ண அலைகள் நல்லவையாக இருப்பின் நன்மையும, தீயவையாக இருப்பின் தீமையும் நமக்கு நடக்க செய்கிறது ! நம் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி , சுக துக்கங்களுக்குநம் எண்ணங்களே காரணம் ! ! எல்லாம் வல்ல பிரபஞ்ச சக்தி எதை கேட்டாலும் தரும் . இதை எவர் ஒருவர் பூரணமாக நம்புகிறாரொ ? அவர் எதிலும் வெற்றி மேல் வெற்றி பெற்று எல்லா வளங்களும் , நலன்களும் பெறுகிறார் !! மானுட உடலானது தெய்வீக மின் கலம் . ஞுவிட்சைத் தட்டினால் மின்சாரம் பாய்வது போலவே , உள்மனதை தட்டினால் , தெய்வீக மின்காந்த அலையானது உடலெங்கும் உள்ள நாடி நரம்புகளில் பாய்ந்து, நுண்ணுடல் , பருஉடலும் ஆரோக்கியத்தையும் , வலிமையினையும் , வல்லமைகளையும் , வீடுபேற்றையும் பெறவல்ல தாகின்னது ! ! கர்மவினைக்குக் கலங்காதே? கர்ம வினையோ.,.. தண்டனையோ .,,, அதிர்ஷ்டமோ,,,. கடவுளின் அருளோ.,,,. எதுவானாலும் மனதின் வழியாகத்த்தான் வந்தாக வேண்டும் . மனத்தின் சக்தியைப் பெருக்கி சரியான வழியில் மனத்தைப் பயன் படுத்தும் நுட்பத்தைத் தெரிந்து கொண்டால் கர்ம வினைகளைச் சர்வசாதாராணமாய் வெல்லலாம் .! ஒரு சித்தரின் எழுத்தில் மனம் லயித்து , அவரின் எண்ண அலைகளுடன் நாம் தொடர்பு கொள்ளும் போது , சித்தரால் விட்டது , காலத்தின் பயன் கருதி நம் மூலம் வெளிப்படும் ! இது எநதத் துறைக்கும் பொருந்தும் . ஒத்த மனமுள்ள முன்னோடிகளின் எண்ணங்களி லிருந்து நாம் எண்ணியதைத் தேடினால் அது கன்டிப்பாக கிடைக்கும் ! சித்தர்களை வரவைக்கும் மந்திரம் : ஓம் சிங்ரங் அங்சிங் மசிவசி . என்று தியானத்தால் தியானிப்பவரின் பிரான ரிதத்தில் அது உடுருவும் போது கோடிட்ட இடத்தில் அவரவர் விரும்பும் முன்னோடி தமிழ் சித்தர்களை பூர்த்தி செய்து ஏற்க்கும் போது தியானிப்பவரின் பிராணசலனம் அந்த சித்தரை வரவைக்கும் ! ! சித்தர்களால் நிரூபணமானதுதான் ! டெலிபதி : டெலிபதி எப்படி வேலை செய்கிறது? நம் எண்ண அலைகள் நம்மைச் சுற்றிலும் உள்ள ஆகாயத்தில் பரவுகிறது. நமது மனோ சக்திகளைப் பயன் படுத்தி , நம் மனத்திரையில் ஒருவரைப் பார்த்து பேசும் போது , ஆகயத்தில் பரவும் நமது எண்ண அலைகள் அவர்கள் மனதில் உடனே பரவி பதிந்து விடுகிறது. நம் ஒருவருக்கு டெலிபதி மூலம் ஒரு செய்தி அனுப்பும் போது , அவர் ஐம் புலன்களும் அடங்கி (தூக்கத்தில்) ஆழ் நிலையில் இருக்கும் போது , நம் அனுப்பும் செய்தி உடனே அவர் (ஆழ் ) மனதில் பதிந்து விடும் ! இந்த முறையில் நாம் அனேக காரியங்களில் வெற்றி அடையலாம் ! ! பிராண ஓட்டம் , இரத்த ஓட்டம், விந்தோட்டம் , மன ஓட்டம், இவைகளே சமச் சீர்ப்படுத்துவத ே குண்டலினி பயிற்சியாகும் . இதில் தேர்ந்து , சகஸ்ராரத்தில் ஊடுருவும் போது , மாவடு போல் உள்ள ஞானக்கண் எனப்படும் பீனியல் தெரபியிலிருந்து வடியும் சக்திப் பாலைப் பருகி தெய்வீகத்தை உணரும் சித்தனுக்கு , உடலை வலுப் படுத்தும் தேங்காய்ப் பால் தேவையில்லை என்பதை குதம்ம்பை சித்தர் : மாங்காய் பாலுண்டு ' , மலைமேலிருப்பார் க்குத் , தேங்காய்ப்பால் ஏதுக்கடி _ குதம்பாய் தேங்காய்ப்பால் ஏதுக்கடி" என்கின்றார் பிரச்சனைகளுக்கு கனவின் மூலம் விடை ? 1 படுக்கையில் படுத்துக் கொண்டு பார்வையை மேலே உயர்த்தி கண்களை மூடி ஆல்பா லெவல் தியானத்தில் இருக்கவும் . 2 மனதுக்குள் நான் எனது பிரச்சனைகளுக்கு விடை காண கனவில் ஒரு தீர்வைச் சொல்லவும் , நான் கனவை ஞாபகம் வைத்துக் கொள்வேன். என பலமுறை மனதுல் சொல்லிக் கொண்டே உறங்கி விடவும் . 3 காலையில் கண் விழித்ததும் நீங்கள் கண்ட கனவுகள் ஞாபகத்திற்க்கு வரும் அதன் மூலம் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்! பல நாள் முயற்ச்சி செய்ய நல்ல தேர்ச்சி அடைவீர்கள் ! மனித மூளையில் நான்கு விதமான அலைகள் உள்ளன . ஆலஃபா , பீட்டா , தீட்டா , டெல்டா . இந்த அலைகளை C,.P.S. என்ற அலரு முறையினால் அளவிடுகிறாகள். CYCLES PEF SECOND என்பதாகும் . இதை E.E.G. என்ற கருவி மூலம் அளக்க முடியும் என்பது மருத்துவ உண்மை . 1 ஆல்பா நிலை(8முதல் 12 G.P.S.வேகம்) என்பது சாதாரண மனிதர்கள் சற்று தன்னை மறந்த நிலை . 2 பீட்டா நிலை (12 முதல் 15G.P.S. வேகம்) நம்முடைய சாதாரண விழிப்பு நிலையே . 3 தீட்டா நிலை (4முதல்8 G.P.S வேகம்) இது மிக அதீத ஆழநிலைத் தியானம் சமாதி , வலிப்பு நோயினால் மயங்கும் நிலை. 4டெல்டாநிலை (4 G.P.S குறைவான வேகம்) மிக ஆழ்ந்த உறக்கம் , கோமா நிலை . இதில் சாமான்யருக்கும் அனுபவத்தால் உணரக்கூடிய நிலை ஆல்ஃபா! மன காட்சி மூலம் உங்கள் எண்ணங்களை நிறைவேற்றலாம் . ? நீங்கள் உங்கள் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று ஆசைப் படுகிறிர்களொ , அந்த மாதிரி வாழ்க்கையை உங்கள் மனதில் சினிமா பார்பது போல் அடிக்கடி பார்த்து வர வேண்டும். எதிர் காலத்தில் இது நடக்கும் என்ற உறுதியான எண்ணமும் வேண்டும் . இல்லா விட்டால் அது ஒரு பொழுது போக்குகான எண்ணமாகி தோல்வி அடைந்து விடும். . ! முழு உயிரியல் அமைப்பு, மூளை மற்றும் பூமி, அதே அதிர்வெண்கள் வேலை. இந்து மதம் மற்றும் தந்திர / யோக மரபுகள் மற்றும் பிற நம்பிக்கை அமைப்புகளில் சக்கரங்கள் நுட்பமான உடலில் ஆற்றல் புள்ளிகள் அல்லது முடிச்சு உள்ளன. அவர்கள் தமனிகள், சிரைகள் மற்றும் நரம்புகள் முக்கிய plexi உடல் சக அமைந்துள்ளதுare. சக்ரா நுட்பமான உடல், இல்லை உடல் பகுதியாக இருந்தால், மற்றும் போன்ற நுட்பமான (அல்லாத உடல்) ஆற்றல் சேனல்கள், என்று nadiis கூட்டத்தில் புள்ளிகள் உள்ளன. Nadiis நுட்பமான உடலில் சேனல்கள் இருந்தால் இதன் மூலம் வாழ்க்கை (பிராணா), அல்லது முக்கிய ஆற்றல் நகர்வுகள். பல்வேறு விவிலிய நூல்கள் மற்றும் போதனைகள் சக்கரங்கள் ஒரு வெவ்வேறு எண் முன்வைக்கின்றன. தந்திர நூல்கள் படி நுட்பமான மனித உடல் பல சக்கரங்கள் உள்ளன, ஆனால் மிக முக்கியமான ஒன்றை கருதப்படுகின்றன என்று 7 சக்கரங்கள் உள்ளன.தந்திர நூல்கள் படி நுட்பமான மனித உடல் பல சக்கரங்கள் உள்ளன, ஆனால் மிக முக்கியமான ஒன்றை கருதப்படுகின்றனஎன்று 7 சக்கரங்கள் உள்ளன. சக்ரா என்ன? கிரீடம் - தலை மேல் அமைந்துள்ள (அகிலத்தின்). நான் புரிந்துகொள்கிறேன் மூன்றாவது கண் - (அஜ்னா) நெற்றியில் அமைந்துள்ள. நான் பார்க்கிறேன் தொண்டை - (விஷூத்தி) தொண்டை மீது தலை கீழே அமைந்துள்ள. நான் பேசுகிறேன் இதயம் - மார்பு அமைந்துள்ள (அனஹட்டா). I LOVE சூரிய பின்னல் - வலது மார்பில் கீழ் அமைந்துள்ள (மணிப்புரா). நான் என்ன செய்ய நாரி - அடிவயிற்றில் அமைந்துள்ளது (ஸ்வாதிஸ்தனா). நான் உணருகிறேன் வேர் - முதுகெலும்பு அடிப்பகுதியில் அமைந்துள்ள (மூலாதார). நான் தான்.
நன்றி சித்தர்கள் குரல
Friday, 8 July 2016
சன்மார்க்க அன்னை – வாலை கன்னி ‘ய’ குமரி
சன்மார்க்க அன்னை – வாலை கன்னி ‘ய‘ குமரி
திருமந்திரத்தில் பல இடங்களில் தாயை போற்றி பாடல் எழுதிஉள்ளார் திருமூலர் பெருமான். அவற்றில் சிலவைகளை இங்கு பாப்போம்.






