“சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை,
முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர்,
பத்தியை பாழில் உருத்த அப்பாவிகள்
கத்திய நாய் போல கதறுகின்றனவே”
– திருமந்திரம் பாடல் 1199
சக்தி-வாலை-கன்னி ‘ய’ குமரி – பாலா- அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி – மனோன்மணி தாய் நமது இடது கண்ணாக சந்திர கலையாக மணி ஒளியாக துலங்கும் பெண் பிள்ளை. அவள் நமக்கு சாதகமாகவே இருப்பாள். அம்மா, தாயே நீயே கதி உன் பாதமே கதி என சரணடையுங்கள். அவள் சகாயத்தால் சற்குருவை பெற்று தவமுறை அறிந்து வைராக்கியத்துடன் தவம் செய்து அவளே முக்தியடைய அமுது தருபவள் , முக்திக்கு நாயகி என்பதை அறியலாம் உணராமல் அடையலாம். தாயை அறியாதவர்கள் தாயை பணியாதவர்கள் மாயையிற் சிக்குண்டு பக்தி நெறி அறியாமல் பாழாய் போவர். அது மட்டுமின்றி தான் தான் பெரியவன் என நாய் போல் கத்துவார் முட்டாள்கள். என திருமூலர் கூறுகிறார். சக்தியை பணிந்தால் உனக்குள் சக்தி பிறக்கும். ஞானம் பெறலாம்.
நம் அன்னை வாலை அருள் பெற, ஞானம் பெற பக்தி வேண்டும். பரிபூரண நம்பிக்கையுடன் வைராக்கியத்துடன் தவம் செய்ய வேண்டும். பக்தியால் தான் நீ பண்படுவாய். பக்தி இல்லை என்றால் ஞானம் இல்லை. குருவிடம் பக்தி செலுத்து உருப்படுவாய். எப்படியோ பக்தி வேண்டும். அது தான் உனக்கு பணிவை கொடுக்கும். ஒழுக்கத்தை கொடுக்கும். நல்ல நெறியோடு வாழ்வாய். பத்தியே முக்திக்கு முதல் படி.
மூட நம்பிக்கையில் மூழ்கி விடாதே!? பரிகாரங்கள் செய்வது , உலக மாயையில் சிக்கி அதற்காக அலைவது பக்தி அல்ல!? ஜம்பத்திற்காக செய்யும் எந்த செயலும் பக்தியல்ல!! இறைவனின் பெரும் புகழை மனமுருகி பாடு! ஆடு ! இறைவனை பற்றி உலகுக்கு எடுத்து கூறு. ஞான தானம் செய். இறைவன் ஒவ்வொரு மனித உடலிலும் உயிராகவே ஆத்மா ஜோதியாகவே தங்க ஜோதியாகவே அருட்பெரும் ஜோதியாகவே துலங்குகிறான் என்பதை உலகுக்கு எடுத்துக்கூறு. இதுவே ஞானதானம். இதை விளக்கும் மெய்ஞான நூற்களை தானம் செய்.
“பக்தியால் ஞானத்தை காட்டி ஞானத்தால் பரத்தை கூட்டும்” என்பதே ஆன்றோர் வாக்கு. பக்தி முத்தினால் ஞானம். ஞானம் முத்தினால் முக்தி. ஒளியுடல்.
கண்ணிலே மணியிலே ஒளியிலே பக்தி செலுத்து! பணி! அன்பு செலுத்து! அவிலே அன்பு – அன்பு உ செலுத்து. அவிலே உவை செலுத்து அதுவே ஞானத்தில் பக்தி. “அ” வாகிய சூரியன் ஊடுருவ வீணும் ‘உ” விலே சந்திரனிலே.
“சக்தியாம் சந்திரனை செங்கதிரோன் ஊடுருவ முக்திக்கு மூலம் அது” – அவ்வையார் பாடியருளிய அமுத மொழி.
இறுதியான உறுதியான பக்தியே , அதனால் வரும் தவமே ஞானம் பெற எதூவாகும். பக்தி இல்லையேல் ஞானம் இல்லை

No comments:
Post a Comment