Sunday, 26 June 2016

காலம்

வைத்திய பொது இலக்கணம்

காலமானது உலகத் தோற்றத்திற்குக் காரணமாய பஞ்ச பூதங்கள் முதல் யாவற்றயுந் தோற்றுவிக்கின்றது. இது வருங்காலம், நிகழ்காலம், சென்றகாலம், எனும் மூன்று வகையாக யுழலுகின்றது. இதுவை அயன், மால், சிவன், என்று கூறப்படும். ஆகையால்தான் திரிமூற்திகள் காலரூபிகள் எனப்படுகிறார்கள். 
அயன்,மால்,சிவன்,என்பது காலத்தின் ஆக்கல்,இருத்தல்,அழித்தல். என்னும்,முத்தொழில்களின் பெயராகும்.மேலும் காலமானது வருடங்களாகவும், அயனங்களாகவும்,ருதுக்களாகவும், மாதங்களாகவும், பட்சங்களாகவும், நாட்களாகவும், பரிணமித்து இருக்கின்றது. காலத்தின் போக்கினால்தான் விருஷங்கள் காய்கனிகளைத் தருகின்றது. தானியங்களைத் தருகின்றது. தானியங்கள் விளைகின்றதது, மழை முதலியவைகளும் ஏற்படுகின்றது. காலத்தின்கோலத் தினால்தான் பெண்கள் ருதுவாகின்றனர். திரிகோணங்கள் ஏற்படுகின்றது, ஜனன மாணதிகளும் உண்டாகின்றது. சுருங்கக்கூறின் அண்டபிண்டங்களின் ஆட்சியே காலம் எனலாம். இந்த காலச்சக்கரத்தில் உழலாதவர் எவருங்கிடையாது. காரிய ஏதுவாகிய இக்காலத்தை வெல்ல எவராலும் முடியாது.எனினும் அவரவர்கள் தங்கள் காலப்பிராப்திவரையிலாவது சக ஜீவியாய் வாழ நினைக்கலாம். சுவரை வைத்துக்கொண்டுதான் சித்திரம் வரைய வேண்டுமென்பது போல, மனிதன் தன் உடல் நன்நிலையில் உள்ள வரையில்தான் எதையுஞ் சாதிக்கமுடியும்.உடலானது நன்நிலையிலிருக்க இதமான உணவும்,மிதமான இயக்கமுமே முதற்காரணமாயுள தென்றும், அ·தின்றி இவைகளின் வியற்பமே பிணி முதலிய பெருந்துன்பங்களுக் குள்ளாகின்றன என்றும் வைத்திய நூல்களில் பன்முறையும் வலியுறித்திக் கூறப்பட்டுள்ளதையும் காணலாம். பிணி முதலாதிகளினால் பெருந்துன்பங்கள் எதுவும் ஏற்படாமல், காலப்பிராப்தி வரையிலாவது, சுக ஜீவியாய் வாழ வைத்தியநூல்கள் நமக்கு ஒரளவு துணைபுரிவதால் உயிர் நூலாம் வைத்தியநூலின் காலஞானத்தைக் குறித்துக் கூறப்பட்டது. காலமென்ற அக்கினியானது ஜடராகினியில் சேர்வதனால் உணவு, நீர், நித்திரை, காமம், என்ற நான்கு வித வாஞ்சைகள் உண்டாகின்றது. இவைகளில் உணவின்மையால் தாது நட்டமும், நீரின்மையால் இரத்தக்குறைவும், காமத்தினால் நேத்திரந்தியக்கெடுதியும், நித்திரையின்மையால் சகல பிணிகளும் தொடர்கின்றன. சுருதி, யுக்தி, அனுபவம் என்னும் மூவிதங்களினால் சரீரம் ஆன்மா என்றும், மனம் அந்தரான்மா என்றும்,பிராணன் பரமான்மா வென்றும் இவைகளே பஞ்ச தத்துவங்களையும் தாரணை செய்து இருக்கின்ற தென்றும்.தெரியவருகிறது. ஆகையால் ஆன்மாவுக்கும், மனதுக்கும் விகற்பமுண்டாகில், மனிதன் உயிர் வாழ முடியாதென்றும் அவன் காலம் என்றவனால் ஐக்கியப்படுவானென்றும் கூறப்படும். அகலில் சம்பூரணமாய் எண்ணெயிருந்தும், சோதியாய்யெரிந்து கொண்டிருந்த விளக்கின் வத்தியானது கையால் எப்படி அணைந்து போகி றதோ,அப்படியே யாவற்றிற்கும் ஆதாரமாகிய வாயு, ஆதாரமற்றதாகிற போது, பிராணிகளுக்கு மரணம் சம்பவிக்கின்றது. இது வைத்தியனுடைய மணிமந்திர ஒளடதாதிகளினால் ஒரளவு சாந்தியாகின்றது. சாதாரணமாய் மனிதன் நாள் ஒன்றுக்கு 21600 முறை சுவாசிக் கின்றான்.இதையே பிராணன் என்றும்,இது விகற்பமின்றி நடைபெற்று வரின்,மனிதன் 100 ஆண்டு வரை,சுகஜீவியாய் வாழலாமென்றும் நம்முடைய பண்டைய நூல்களில் கூறப்பட்டுள்ளது.இயற்கையான சுவாசமானது 12 அங்குலம் ஒடி,4 அங்குலம் அழிந்து,8 அங்குலம் தான் நின்ற இடத்தை நோக்கும்.இவ்வாறு சுவாசத்தில் 4 அங்குலம் அழிவு ஏற்படுவதால்தான், மனிதனின் ஆயுட்காலம் 100 வயதாக ஏற்பட்டதென்றும்,அ·தின்றி சுவாசத்தில் அழிவு எற்ப்டாமல் இருப்பின் பல்லாண்டுகள் ஜீவித்து இருக்கலாமென்றும் அறியக்கிடக்கின்றது. அதனால்தான் யோகாப்பியாசிகள் சுவாசத்தைச் சிறிது சிறிதாய் பந்தனப்படுத்தி,நீண்ட ஆயுளையும், திடமான தேகத்தையும் அடைந்து வாழ்கின்றனர்.சுவாசத்தில் ஒரு அங்குலத்தை பந்தனப்படுத்தினால் பல சக்திகள் ஏற்படுமென்றும்,12 அங்குலத்தை பந்தனப்படுத்தியவர் பேரின்ப நிலையை அடைந்து என்றும் சிரஞ்சீவியாய் இருப்பார்களென்றும் அறியக்கிடக்கின்றது. வலதுபக்கத்து நாசியில் சுவாசிப்பதற்கு சூரியகலை அல்லது பின்கலை என்று பெயர்.இது 12 கலைகளையுடையது. இடதுபக்கத்து நாசி சுவாசிப்பதற்க்கு சந்திர கலை அல்லது இடகலை என்று பெயர். இது 16 கலைகளையுடையது. இவைகள் இரண்டிற்கும் இடையில் இருப்பதே சுழிமுனை எனப்படும்.மேற்கூறப்பட்டுள்ள சரங்களில் முறைப்படி சுவாச அப்பியாயங்களை செய்துவருவதற்கே பிராணயாமம் என்று பெயர். இதனைத்தக்க குரு முகாந்திரமாய்க்கற்றுப் பழகிவருதல் நன்றென்றும், இதனால் மனிதன் நீண்டநாள் சுகானந்தத்தோடு உயிர் வாழ முடியும். முக்குற்ற இலக்கணம் இச் சரீரம் பிருதிவி என்னும் பூதத்தால் உருவாகி, ஆகாயம் என்னும் பூதத்தினிடமாக ஒடுங்கி, அப்பு, தேயு, வாயு என்னும் மூன்று பூதங்களால் இயக்கப்பட்டு வருகின்றது. மேற்கூறப்பட்ட அப்பு, தேயு, வாயு என்பதே கப, பித்த, வாதமென்ற முக் குற்றங்களெனவும், இவைகளின் இயக்கத்தின் விகற்பமே நோய்க்குக் காரணமெனவுங் கூறப்படும். இக் கருத்தினைக் கொண்டே தமிழகத்துத் தனிப்பெரும் புலவராகிய திருவள்ளுவரும், " மிகினுங் குறையினு நோய்செய்யு நூலோர் வளி முதலா வெண்ணிய மூன்று" எனக் கூறியுள்ளார். ஆகவே நோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணத்தை அறிதல் மிகவும் அவசியமாகும். வாதம்:- இது கடினம், இலேசத்துவம், குளிர்ச்சி, வரட்சி, அசைதல், அணுத்துவம் என்னும் குணங்களை யுடையது. இது தொப்புளுக்குக் கீழ் இடுப்பு தொடை எலும்பு, தோல் முதலியவிடங்களில் பரவி மலம் நீர் விந்து வியர்வை இவைகளைக் கழியச் செய்தல் முதலிய தொழில்களைச் செய்விக்கின்றது. இது பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூரமன், கிரிதரன், தேவதத்தன், தனஞ்செயன் எனப் பத்து வகைப்படும். பிராணன் மூலாதாரத்திலுதித்து மேல்நோக்கிச் சிரசை இருப்பிடமாகக்கொண்டு சுவாசிக்கக் காரணமாயுளது. அபானன் மூலாதாரத்தினின்று கீழ்நோக்கி குதத்திற்கும் குய்யத்திற்கும் இடையே நின்று மல மூத்திராதிகளைக் கழிக்கும். வியானன் இருதயத்தை இருப்பிடமாகக்கொண்டு உடல் முற்றும் வியாபித்து நீட்டல் மடக்கல் ஸ்பரிசம் அன்னசாரத்தை நிரப்பல் முதலிய தொழில்களைப் புரியும். உதானன் மார்பினிடமாக நின்று உதராக்கினியை எழுப்பி அன்னத்தைச் சீரணிக்கச்செய்து நாடிகளில் செலுத்தும். சமானன் நாபிஸ்தானத்தை இருப்பிடமாகக்கொண்டு உணவாதிகளினால் ஏற்பட்ட குற்றங்களை மீறவொட்டாமல் தடுத்து சமப்படுத்தும். நாகன் கலைகளை உணரல், பார்த்தல் முதலிய தொழில்களுக்குக் காரணமாயுள்ளது. கூர்மன் மனதிடமாக நின்று கொட்டாவி, சிரித்தல், கண்ணிமைத்தல் முதலிய தொழில்களைப் புரியும். கிரிதரன் நாநாசி இவைகளினின்று இருமல், தும்மல் முதலிய தொழில்களை உண்டாக்கும். தேவதத்தன் கோபம், சோம்பல், கொட்டாவி முதலியவற்றை உண்டாக்கும். தனஞ்செயன் வீங்கச் செய்தல் முதலியத் தொழில்களை உண்டாக்கும். பித்தம்:- இது வெப்பம், குரூரம், பளபளப்பு, சலரூபம், புளிப்பு, விரேசனம் முதலிய குணங்களுடையது. இது உந்திஸ்தானத்தை இருப்பிடமாகக் கொண்டு உஷ்ணம், சீரணம், பசி, தாகம், சுவை, பார்வை, காந்தி முதலிய தொழில்களுக்குக் காரணமாக இருக்கின்றது. இது அனலம், இரஞ்சகம், சாதகம், ஆலோசகம், பிராசகம், என ஐந்து வகைப்படும். அனல பித்தமானது ஆமாசயத்திற்கும் பக்குவாசயத்திற்கும் நடுவில் நின்று, தனது இயற்கைத் தன்மையாகிய உஷ்ணத்தினால் உணவைச் சீரணிக்கச் செய்கின்றது. இரஞ்சக பித்தமானது ஆமாசயத்தில் நின்று இரச தாதுவைப் போஷிக்கும். சாதக பித்தமானது இருதயஸ்தானத்தில் நின்று, அறிவு புத்தி முதலியவற்றிற்குக் காரணமாகி எக்காரியத்தையுஞ் சாதிக்குந் தன்மை வாய்ந்தது. ஆலோசகப் பித்தமானது கண்களில் நின்று பார்வைக்கு யேதுவாயுளது. பிராசக பித்தமானது சருமத்தினிடமாக நின்று அதற்குக் காந்தியை யுண்டாக்கும். மருத்துவனின் இலக்கணம் கடவுளால்படைக்கப்பட்டமனிதன் இவ்வுலகின்கண் தர்மம், அதர்மம், காமம் மோஷம், என்ற நான்கு புருஷார்த்தங்களை அடைந்து ஜீவிப்பதற்கு முதற்காரணமாயுளது தேகாரோக்கியமாகும். இதற்கு விரோதியாக உள்ளதுதான் வியாதிகள் எனப்படும்.ஆகவே இப்பிணி முதலிய பீடைகளின்றும் விடுபட்டு சுசுவாழ்வுபெறத் துணைபுரியும் மருத்துவர்களைக் கடவுளுக்குச்சமமாகக் கருதப்படும். கூர்மையான அறிவுடையவனும்,தைரியவானும்,ஆசாரமுள்ள வனும் தேகம்,பல்,கண்,உதடு,செவி இவைகள் விகாரமற்றவனும்,சந்தேகமற்வனும், ஞாபகசக்தியுடையவனும், சகலவித்தைகளில்தேர்ந்தவனும், உயிர்களிடத்து அன்புள்ளவனும், நல்லொழுக்கமுள்ளவனும், எந்நோயையும் அசாத்திமென கைவிடாமல், உயிர் உடலைவிட்ட ுநீங்கும்வரையில் தீவிரபுத்தியுடனும் மனோதிடத்துடனும், சிகிச்சை செய்பவனும்,ஆகிய இத்தியாதி குணங்களு டையவனே சிறந்த மருத்துவனாவான். மருத்துவன் அறிந்துகொள்ளவேண்டியவைகள்: சோதிடம் பஞ்சபட்சி,சரநூல், குற்றமற்றவிகார வித்தை, அகத்தியமா முனிவர் அருளிய நூல்கள்,தீதில்லா மந்திரங்கள்,கர்மகாண்டம் முதலியவைகளைக் கசடறக்கற்றவர்களே சிறந்த வைத்தியனாக கருதப்ப்டும்.இவற்றுள் சோதிடம் என்பது கிரகதிகளின் ஆதிக்கத்தை குறிப்பிடும் சாத்திரமாகும். இதில்ஜன்மலக்கனத்திற்கு ஆறாம் வீட்டதிபதினாகிய, ரோக ஸ்தானாதிபதி,இலக்கனாதிபதி,ஆகிய இவர்களின் இயக்கங்களைக் கொண்டு மானிடர்களுக்கு எற்படக்கூடும் நோய்க¨ளெயும், அவற்றின் வன்மை மென்மைகளையும், ஒருவாறு கண்டறியமுடியும்.பஞ்ச பட்சி என்பது வல்லூறு ஆந்தை,காகம்,கோழி,மயில் முதலிய இயக்கங்களைக்கூறும் சாத்திராகும். இதுவும் சோதிடத்தைப்போலவே காலத்தின் நன்மை தீமைகளைக்கண்டறி ந்து,நடக்கப்பயன்படும்.சரம் என்பது சூரியகலை சந்திரகலை ,சுழிமுனை முதலிய சுவாசக்குறிப்புகளைக் கூறும் சாத்திரமாம். இதனால் நோயின் சாத்யா சாத்தியங்களை ஒருவாறு கணிக்கமுடியும்.விகார வித்தை என்பது இரச வாதத்தைப்பற்றிக்கூறப்படுஞ்சாத்திரமாம்.அதாவது செம்பு, ஈயம் முதலிய மட்டலோகங்களைத்,தங்கம்,வெள்ளி முதலிய உயர்ந்த லோகங்க ளைச்செய்யும் வித்தை,இது பெரும்பாலும் முப்பு முதலிய குருமருந்துகளைக் கொண்டு செய்யப்படும்.இத்தகைய விகார வித்தையை யறிந்தவனே வாதி யென்றும்.அவன் ரசகந்தி முதலிய சரக்குகளைக் கட்டி நீற்றி மருந்தாக முடித்து பிணிகட்கு வழங்க எத்தகைய பிணிகளும் விரைவில் குணப்படும் என்று அனுபவத்தில் கண்டுள்ளது.மற்றும் பதினென் சித்தர்களில் முதன்மை யானவராகிய அகத்தியனார் எழுதியநூல்களையும்,மந்திரங்களையும்,கற்றறி தல் வேண்டும். கர்மகாண்டம் என்பது கர்மாதிகளினால் நோய்கள் சம்பவிக்கும் விதத்தையும்,அதற்குச் சாந்தி செய்யும் வகை முதலியவைகளையும் கூறப்படுவனவாம். ஆகவே இதுவரையில் கூறப்பட்டவகள் யாவற்றையும்குற்றமற கற்றுணர்ந்தவர்களெ சிறந்த வைத்தியர்களாகவும், கடவுளுக்குச்சமமாகவும் கருப்படுவர். இவற்றுள் ஒரு சிலவற்றைமற்றும் கற்றுவிட்டு வைத்தியம் செய்வது ஆபத்துக்கிடமாகும். சிகிச்ச ைமுறைகளையும், நல்லமருந்து முறைகளையும்,மட்டும் தெரிந்துகொண்டால் மட்டும் போதாது உடற்கூறு தத்துவங்கள் அஷ்டவித பரிஷை முதலியச்வற்றையும், அவற்றின் வாயிலாக நோய்களைக் கணிக்கவும்பயில வேண்டும். ம்ற்றும் மருந்துகளின சக்தி, குணம், நிகண்டு, முறிவு,செயல்பாக நூணுக்கங்களை முதலியவற்றை அறிந்துருப்பதுடன், கூடுமான வரையில் தானே மருந்துகளைச ்செய்யும் திறமையும் பெற்றிருத்தல ்பெரிதும் நன்மயை பயக்கும். நோயாளியின் இலக்கணம் நோயாளியானவன் உண்மையை பேசுபவனாகவும்,வைத்தியரைக்குருவாக யெண்ணி,அவர்மீது அவர்கொடுக்கும்,மருந்தின் மீது மதிப்பும்நம்பிக்கையும் கொண்டு அதை அவர் சொன்னபடி அருந்திய பத்தியத்தைக்காக்கக்கூடிய வனாகவும்,நல்லொழுக்கமுடையவனாகவும் இருத்தல் வேண்டும்.இன்றேல் பிணி தீராது என்பதாம். நோயில் சாத்தியக்குறிப்புகள்: உடல்லேசாகயிருத்தல், முகம்விகாரமற்றிருத்தல்,கைகால்கள், நீட்டமடக்க இயலுதல்,நா சுத்தமாயிருதல், நாசியின்வழியாக சுவாசித்தல், கண்டத்தில் சுபமின்மை, பஞ்சேத்திரியங்களும், தன்சுய உணர்வுடன் தொழில் புரிதல் எனும் குணங்களுடைய நோயாளி எல்லா விதத்திலும் எளிதில் குணமடைந்து உயிர் வாழ்வான். நோயில் அசாத்தியக்குறிப்புகள்: உடல் கணத்தல், முகம் முகம் விகாரமற்றிருத்தல்,வாயின் வழியாகசுவாசித்தல், நித்திரையின்மை, பஞ்சேத்திரங்களின் தொழில் கெடல்,உணர்ச்சியற்றுருத்தல், முதலிய குணங்கள் இருப்பின் அந்நோயாளியின் பிணி தீர்வது மிக கஷ்ட சாத்தியமாம். மரணக்குறிப்புகள்: வாதமானதுபித்தஸ்தானத்திலும், பித்தமானது, கபஸ்த்தானத்திலும், கபமானது கண்டஸ்த்திலும் இருக்குமாகில் மரணஞ் சம்பவிக்கும்.மேலும் இரவில்அதி தாகமும்,பகலில் சீதளமும்,கண்டத்தில் கோழைகட்டுவதும், மிகுபேதியும், கஷ்ட சுவாசத்துடன் இருமல்,சூலை,விக்கல் முதலியனவும் இருப்பின் நோயாளி உயிர் வாழ்வது கடினம். மார்பு கை கால் முதலியன சீதளமாயும்,சிரசுமட்டும் மிக உஷ்ண மாயிருத்தல், தேகம், பலவிதசாயலாயும், மேல் மூச்சு அல்லது கஷ்டசுவாசத்து டன் வாந்தி,விக்கல் முதலியவைகளும்,தேகத்தில் தூர்நாற்றமும் இருத்தல், தும்மலுடன் மல மூத்திரம் இந்திரியம் முதலியன நளுகல்,நா உதடு இவைகள் கறுப்பு நிறமாதல், எப்போதும் இடது நாசியிலேயே சுவாசம் விடுதல், பார்வை குன்றல்,காதில் ஒரு விதஒலி எப்போதும் இருத்தல்,கண்டபடிபிதற்றுதல் முதலிய குணங்களும்,மரணக்குறிகளென்றறியயும்.மற்றும் சிவன் ஏம தூதர்கள், கந்தர்வர், சர்பகீடங்கள் முதலியவற்றைக் கனவில் பார்த்தல்,பல்லக்கு,படகு,முதலியவற்றில் செல்லுதல்,சந்தனம்,புஷ்பம்,மாமிசம்,முதலியவற்றைப் பெருதல்,இன்னும் இது போன்ற பயங்கரக்கனவுகள் முதலியவைகளைக் கண்டல் முதலியனவும் மரணக்குறிகளெனப்படும். சூரியோதய சமயத்தில் ஆந்தை அல்லதுகாகம் கூக்குரலிட்டுத்தன் எதிரில் வந்து தலையின்மீது குத்தினால் சந்தேகமின்றி அவன் அன்றைய மாலைக்குள் மரணமடைவான். எந்த ரோகியின் ஏழாவது வீட்டில் சூரியன் இருக்கின்றானோ அப்போதாவது ஜன்மலக்கனத்தில் சந்திரன் இருக்கும்போதாவது அவன் விஷ ஜந்துகளால் தீண்டப்பெரின் உடனே மரணமடைவான். நோயில் நட்சத்திராதிகளின் ஆதிக்கம்: விருச்சிகம்,மேஷம்ஆகியஇவ்வோரைகளில் நந்தாதிதியிலும்மிதுனம்கன்னி கை ஒலைகளில் பத்திராதிதியிலும் ,கடக ஒரையில் ஐயாதிதியிலும் கும்ப சிம்ப ஓரையில் ரிக்ததிதியிலும், தனுசு ஓரையில் பத்திராதிதியிலும்,மிதுன ஓரையில் ஐயதிதியிலும்,மகா ஓரையில் பூரணதிதியிலும்,நோய்கள் உண்டாகின் நோயாளி மரணமடைவான். மேலும் செவ்வாய்க்கிழமை,கிருத்திகை நட்சத்திரம் நந்தாதிதி கூடிய நேரத்திலும்,புதன்கிழன்மை ஆயில்யநட்சத்திரம்,பத்திராதிதி கூடிய நேரத்திலும்,வியாழக்கிழமை மக நட்சத்திரம் ஐயா திதிகூடியநேரத்திலும் வெள்ளிக்கிழமை தனிஷ்டை நட்சத்திரம் ரிக்த திதிகூடிய நேரத்திலும், சனிக்கிழமை பரணி நட்சத்திரம் பூரணதிதி கூடிய நேரத்திலும்,நோய்கள் உண்டாகில் அசாத்தியமாம். சுவாதி,ஆயில்யம்,திருவாதிரை,பூசம்,கேட்டைமுதலிய நட்சத்திரங்களில்,நோய் கண்டால் அசாத்தியமாம்.ரேவதி அனுராதை முதலிய நட்சத்திரத்தில்,நோய் கண்டால் மிகவும் கஷ்ட்டப்படுத்தி மரணத்தையுண்டாக்கும். உத்திரட்டாதி மிருகசிருஷம் முதலிய நட்சத்திரங்களில் நோய் கண்டால் ஒரு மாதம் வரையில் நோய் விடாது.மக நட்சத்திரத்தில் நோய் கண்டால் இருபத்தோறு நாட்களில் நோய் தீரும்.அஸ்தம்,அனுஷம்,விசாகம்,முதலிய நட்சத்திரங்களில் நோய் ஆரம்பித்தால் பதினைந்து நாள்வரையில் இருந்து பிறகு குணமாகும்.மூலம்,அசுவினி,கிருத்திகை முதலிய நட்சத்திரங்களில், நோய் பிறந்தால் ஒன்பது நாட்களில் குணமாகும். புரட்டாசி, தை மாதங்களில் உத்திர நட்சத்திரங்களில் பங்குனி மாதத்தில் ரோகினி புனவசு நட்சத்திரங்களிலும் நோய்கள் உண்டாகில் ஒரு வாதத்தில் குணமாகும். சகுனம் மருத்துவன் நோயாளியிடம் போகும்போது பேரிகை, சங்கு, வீணை சுபஷ்திரீ கன்றுடன் கூடிய பசு, மங்கள ஓசை, அரசன், மூட்டையுடன் வண்ணான், குடை, இரட்டைப் பிராமணர்கள்,தயிர்,சந்தனம்,கள்,மாமிசம்,தேன்,குதிரை முதலியசுக சகுனங்களை தனக்கு எதிலாவது அல்லது வலதுபுறமாக காண்பானாகில் அது நல்ல சகுனம் என்றறியவும். விறகு, நெருப்பு, பாம்பு, உப்பு, வெல்லம்,எண்ணெய், மருந்து விகார ரூபீகள், அமங்கல ஒலி, எண்ணெய் தேய்த்துக்கொண்டவன்,முதலியவைகள் எதிர்பட்டால் அது கெட்ட சகுனமென்றறிந்து சர்வஜாக்கிறதையுடன் சிகிச்சை செய்தல் வேண்டும். மருத்துவனை அழைக்கச் செல்லும் தூதுவன் தன்னுடன் இளிப்புப் பொருட்கள், மாமிசம், தொல், கோல், நாய், எருமை, முதலியவற்றைத் தன்னுடன் எடுத்துச் செல்லுதல், மருத்துவனுக்குப் பின்புறமாகவும், வலதுபுறமாகவும், மேல்புறமாகவும் நின்று பேசுதல், ஆயில்யம், மகம், மூலம், கேட்டை, பரணி முதலிய நட்சத்திரங்களில் அழைத்துவரச் செல்லுதல் முதலியவைகளும் கெட்டச் சகுனங்களாம். வெண்மை வஸ்திரம் தரித்தவர்கள், சுபஸ்திரீகள், நல்ல சொற்களைப் பேசுபவர், நல்ல நேரங்களில் அழைத்துவரச் செல்லுதல் முதலியன நல்ல சகுனங்களாம். கபம்:- இது சீதளம், கனத்துவம், மந்தம், வழுவழுப்பு, மினுமினுப்பு, ஸ்திரம் முதலிய குணங்களையுடையது. இது மார்பு ஸ்தானத்தை இருப்பிடமாகக் கொண்டு, மார்பு சிரசு நா கண்டம் ஆமம் கீல்கள், உரோமம் இரசதாது மேதோதாது முதலியவற்றில் சஞ்சரித்து, அசையாமை, மழுமழுப்பு, கீல்களுக்கு உறுதி முதலிய தொழில்களுக்குக் காரணமாயுள்ளது. இது அவலம்பகம், கிலேதகம், போதகம், தருப்பகம், சந்திகம் என ஐந்து வகைப்படும். அவலம்பகமானது இருதயஸ்தானத்தினிடமாக நின்று மற்ற நான்கு வகை கபங்களுக்கும் ஆகாரமாயிருக்கும். கிலேதகமானது ஆமாசயத்தினிடமாக நின்று அன்னபானாதிகளை மிருதுவாக்குந் தொழிலைப் புரியும். போதகமானது, நாவில்நின்று சுவைகளை அறியச் செய்யும். தருப்பகமானது, சிரசில் நின்று கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும். சந்திகமானது, கீல்களின் இயக்கத்திற்குக் காரணமாகி நிற்கும். வாதத்திற்கு பாதம் முதல் நாபி வரையில் இடமென்றும், பித்தத்திற்கு நாபி முதல் கண்டம் வரையில் இடமென்றும், சிலேத்துமத்திற்கு கண்டம் முதல் சிரசு வரையில் இடமென்றும் கூறப்படும். மற்றும் மலத்தைப் பற்றியது வாதமென்றும், மூத்திரத்தைப்பற்றியது பித்தமென்றும், விந்துவைப் பற்றியது கபமென்றும், வாதத்திற்கு நிறம் கருப்பென்றும், பித்தத்திற்கு நிறம் மஞ்சளென்றும், கபத்திற்கு நிறம் வெண்மையென்றும் கூறப்படும். நோய்களில் காணுங் குறி குணங்களைக்கொண்டு அந்நோயில் விகற்பமுற்ற தோஷங்களை எளிதில் கண்டறிய மேற்கூறப்பட்ட முக்குற்ற இலக்கணம் பெரிதும் உதவிபுரியு மென்றுணர்க.

சிற்றின்பம் ...பேரின்பம்

சிற்றின்பம் ...பேரின்பம்.

படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம்.
படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்.
படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்.
படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்.
படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.
படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.
என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.
இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.
நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.
நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.
அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.
அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.
செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.
செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.
செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.
செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.
புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.
அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.
இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது சிற்றின்பம்.
வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.
நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.
நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.
உடலோடு மனதை தொடர்புப்படுத்துவது சிற்றின்பம்.
உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.
இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.
துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.
எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.
எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.
பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.
மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.
பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.
பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.
சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.
எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.
பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.
தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.
அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்.
அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.
அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.
அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.
அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.
அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.
பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.
பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.
முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.
முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.
இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்.
கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.
உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.
உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.
புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.
புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.
மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்.
மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.
மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.
மரணத்தையும் வெல்வது பேரின்பம்.
மனமாய் இருந்தால் சிற்றின்பம்.
மனதைக் கடந்தால் பேரின்பம்.
வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.
எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.
பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்.
மொத்தமாய் கண்டால் பேரின்பம்.
அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்.
அகங்காரம் துறந்தால் பேரின்பம்.
தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்.
அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்.
ஆண் பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம்.
ஆண் பெண்ணை வணங்குவது பேரின்பம்.
துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்.
துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.
ஜீவராசிகளால் தரமுடிந்தது சிற்றின்பம்.
இறைவனால் தரப்படுவது பேரின்பம்.
உலகைப் பற்றினால் சிற்றின்பம்.
இறைவனைப் பற்றினால் பேரின்பம்.
பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்.
தன் நலம் கொள்ளாதது பேரின்பம்.
இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்.
இன்பமான இன்பமே பேரின்பம்.
அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம்.
ஞானம் விரும்புவது பேரின்பம்.
பெற்று மகிழ்வது சிற்றின்பம்.
கொடுத்து மகிழ்வது பேரின்பம்.
சக்தியை இழப்பது சிற்றின்பம்.
சக்தியாய் மாறுவது பேரின்பம்.
பற்றுக் கொள்வது சிற்றின்பம்.
பற்றற்று இருப்பது பேரின்பம்.
மாறுவது, தாவுவது சிற்றின்பம்.
மாறாதது நிலைத்தது பேரின்பம்.
நிலையற்றது சிற்றின்பம்.
நிரந்தரமானது பேரின்பம்

Friday, 17 June 2016

வெள்ளி

மகாலெஷ்மியின் அம்சம் பொருந்திய கிழமை வெள்ளிகிழமை.இந்த கிழமையில் அம்மனுக்கு விரதம் இருந்தால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.இறந்தவர்களை எழுப்பும் சஞ்சீவி மந்திரத்தை கற்ற சுக்கிரச்சாரியார் அமசம் பெற்றது இந்த கிழமை.
சுப காரியங்கள்,திருமண காரியங்கள்,தெய்வ காரியங்கள் இந்த கிழமையில் செய்வது மிகவும் சிறப்பாகும்.அதேபோல் வெள்ளியில் பெண்குழந்த பிறப்பதும் சிறப்பாகும்
அசுரர்களின் குருவாக விளங்குபவர் சுக்ர பகவான். சகல வித்தைகளிலும் வல்லவரான இவர், சிவபெருமானை துதித்து வற்றாத செல்வத்தையும், அமர சரீரத்தையும் பெற்றவர். மேலும் சிவனை வேண்டி நவக்கிரகங்களில் ஒருவர் ஆனார். வெள்ளிக்கிழமை இவரது பெயரால் சுக்ரவாரம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு முறை ஈசனின் கோபத்தைத் தணித்து, சுக்ரனை அம்பிகை காப்பாற்றினாள். ஆகவே வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டால், சுக்ரனின் ஆசி கிட்டும்.

வெண்மை நிற திருமேனி கொண்டவர். இவருக்கு உகந்த உலோகம் வெள்ளி. பஞ்சபூதங்களில் நீர். மிருத சஞ்சீவினி என்ற மந்திரத்தின் வாயிலாக இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தி படைத்தவராக சுக்ரன் விளங்கினார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. அறிவில் சிறந்த பண்டிதராகவும், சகல சாஸ்திரங்களிலும் கரை கண்டவராகவும் இவர் திகழ்கிறார். சுக்ரனை வழிபட்டு மொச்சை பயிறை நிவேதனம் செய்வதும், அதனை தானம் செய்வதும் சுக்ரனின் அனுக்கிரகத்தை பெற வழிவகுக்கும்.
வாமன அவதாரத்தில், சிறிய உருவத்தில் வந்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார் திருமால். அப்போது தானம் கொடுக்கக் கூடாது என்று மகாபலியை, சுக்கிராச்சாரியார் தடுத்தார். ஆனால் மகாபலி, சுக்ரனின் சொல்லைக் கேட்காமல் தானம் கொடுக்க முன்வந்தான். அப்போது சுக்ரன் வண்டு உருவம் எடுத்து, தானம் செய்ய நீர் வார்க்கும் கமண்டலத்தின் துவாரத்தை அடைத்தார். வாமனர் ஒரு தர்ப்பையால் துவாரத்தை குத்தினார். அப்போது சுக்ரனின் ஒரு கண், பார்வையற்று போனது. இதையடுத்து சுக்ரன் திருமயிலையில் சிவலிங்கத்தை பூஜித்து தன் கண்ணை திரும்பப் பெற்றார். சுக்ரன் பூஜித்ததால் இங்குள்ள இறைவன் வெள்ளீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
சுக்ர காயத்திரி மந்திரம்:–
‘ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தநு ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ரஹ் ப்ரசோதயாத்’
பொருள்:– குதிரைக் கொடியை உடைய சுக்ர தேவனை அறிவோமாக. வில்லைக் கையில் ஏந்தி நிற்பவனான அவன் மீது தியானம் செய்கிறோம். சுக்ர பகவானான அவர், நம்மை காத்து அருள்செய்வாராக.
கோவில்களில் உள்ள நவக்கிரக சன்னிதியில் சுக்ர பகவானை வழிபடும் பொழுது இந்த காயத்திரி மந்திரத்தைச் சொல்லி வழிபட வேண்டும். தினமும் 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்வதால், கலைகளில் சிறந்து விளங்கலாம். விருப்பங்கள் நிறைவேறும். அதிர்ஷ்டம் உண்டாகும். வெற்றி கிடைக்கும். நீண்ட ஆயுள் வந்து சேரும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும். இல்லறம் இனிமையானதாக இருக்கும். வியாபாரம் செழித்து வளரும்.

மஞ்சள்

மஞ்சளின் மகத்துவம்.🌼
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
மஞ்சள் என்றாலே மங்களம் பெருகும். சகல செளபாக்கியங்களும் கிட்டும்.அம்பாளின் பேரனுக்கிரகமான மஞ்சள் எங்ஙனம் தோன்றியது. எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும். அதனால் பெறும் நலன்கள் யாவை என்பன குறித்து நாம் பல சொற்பொழிவுகளை கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். 

போற்றப்பட வேண்டிய  மஞ்சளை மங்கலமாதா் எங்ஙனம் பூசிக்க வேண்டும் என்பது முக்கியம்.

மஞ்சள் என்றாலே மங்களம் என்று ஒரு பொருள் உண்டு. மஞ்சளின் மகிமையைப் பற்றி பேசாத, பாடாத சித்தா்களே இல்லை எனலாம். பல மகான்கள்-ஞானிகள் அம்மன் புராணங்களை எழுதியுள்ளாா்கள். 

மஞ்சளின் பிறப்பு, பெருமைகள், மகிமைகள், பயன்கள் இவற்றையெல்லாம் மிக விாிவாக விளக்குவது '.*உத்தம சிவ தாண்டவ ரகசியம்',* என்னும் நூலிருந்து தான். இதில் குரு அகத்தியா்-- சீடா்போகா் சம்பாஷணையில் ஞான சீடா் தன் தெய்வ குருவிடம் மக்கள் சாா்பில் நின்று மஞ்சளின் வரலாற்றை விளக்குமாறு வேண்டி,

' சற்குருதேவா! மகாதேவா! மஞ்சள் பிறந்த நிலைக்கு காரணம் யாதோ? ' என வினவுகின்றனா்.

அதற்கு அகஸ்திய தேவா்,,,,,,

"அன்பனே போகா! அண்ட சராசரத்தில் சக்தி வாய்ந்த ஞானக்கனி கொடுத்த அருள் மஞ்சளே" என்கின்றாா். ஞானக்கனி  என இங்கு அகஸ்திய பெருமான் குறிப்பிடுவது அம்பாளையே ஆகும்.

' ஞானத்தினின்று பிறந்தமையால் மஞ்சளின் முழு அருமை, பெருமைகளை ஞானிகளே முழுவதுமாக உய்ந்து உணர முடியும். மற்றவா்களுக்கு மிக அாிது பாரேன்' என்கின்றாா் அகஸ்திய பெருமான்.,

தா்ப்பையில் கணபதியை ஆவாகனம் செய்தால் பிரமச்சா்ய சித்தி கைகூடும்.

அருகம்புல்லில் கணபதியை ஆவாகனம் செய்தால் காாிய சித்தி கைகூடும்.

சந்தனத்தில் கணபதியை ஆவாகனம் செய்தால் ஆத்ம சித்தி கிட்டும்.

வெள்ளருக்கு வோில் ஆவாகனம் செய்தால் காயகல்ப சித்தி கிட்டும்.

மஞ்சளில் ஆவாகனம் செய்தால் விண்ணப்பித்தவைகள் கைகூடும். கேட்பதைத் தருவாள். தருவாள் என்பதன் மூலம் கணபதியை விட்டு என்றும் பிாியாத வல்லப,மாதாவே அருளுவாள் என்கின்றனா்.மேலும் எவ்வகை பித்தத்தையும் ( மன நோய்) போக்கவல்லது.

மஞ்சளை முன்னிலையில் வைத்துத்தான் எந்த இந்து திருமணமும், மங்கள சடங்குகளும் நடைபெறும். மஞ்சளில் பிள்ளையாா் பிடித்து வைப்பதிலிருந்து வழி அனுப்புவோருக்கு விடை கொடுப்பது வரை மஞ்சள் கலக்காத நிகழ்ச்சியே இல்லை எனலாம்.

' மஞ்சளே   மங்களம்-- மங்களமே மஞ்சள்' இது அம்பாளின் பேரனுக்கிரகம் ஆகும்.

சகல சித்திகளும் பூரணமாக அடைந்துள்ள தன் ஞான குருவான அகஸ்தியாிடம் பெரும் பணிவோடு போகா் கேட்கின்றாா்........

" தாங்கள் எங்ஙனம் மஞ்சள் பெற்றீா் குருதேவா?" 

மஞ்சளை எனக்களித்தவள் காமகலா காமேஸ்வாி போகா ! என்கின்றாா் அகஸ்திய பெருமான்.

மஞ்சளைக் கொண்டு எவ்வகை சித்தியையும் பெற முடியும். தாந்திரீக முறையில் எந்தத் தெய்வத்தையும் மஞ்சளைக் கொண்டு முறையாக வசியம் செய்ய முடியும்.

ஏன்? ஏவலை வைக்கலாம். ஏவலை எடுக்கலாம். எம்மகள் கீழ்க்கண்ட தோத்திரத்தை ஆத்ம சுத்தியுடன், தெய்வ பக்தியுடன் பதினோரு முறை ஓதுகின்றாளோ, அவளுக்கு தேவியே நோில் வந்து மங்கள மஞ்சளை அருளுவாள்.

" சங்காிசூலி சாம்பவிநீலி சகலகலா மாயி

மங்கள தத்துவ மரகதமேனி மாயவன் தங்கையளே

சங்கினை ஏற்றி சங்கடம் தீா்க்கும் காமகலா மாயி

மந்திர சக்தி மஞ்சுளதேவி மஞ்சள் அளித்திடுவாய்.

இதை,இயற்றியவா் அகஸ்திய மகா பிரபு ஆவாா். இப்பாட்டை வைத்துக் கொண்டு இகலோக சித்திகள் அனைத்தும் பெறலாம்.

சிவனின் பாதியாகிய அம்பிகையே நோில் தோன்றி அகஸ்திய பெருமானுக்கு வழங்கிய பெருமையுடையது மஞ்சள். இது தோன்றிய வரலாற்றை உலகறியுமாறு செய்யத் திருவுள்ளம் கொண்ட போகா் பெருமான், அகஸ்தியாிடம்..........

' மஞ்சள் எங்ஙனம் பிறந்தது, குருதேவா? " என்று பணிவாக வினவுகின்றாா். அதற்கு அகஸ்திய பெருமான்........

" அன்பனே போகா! யாம் கூறுவதை விட எம் பரம்பரையில் உதித்த குப்பைச் சித்தா் இதற்கு விடை கூறுவாா்', என்று பதிலுரைக்கின்றாா்.

2500 -ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குப்பைச் சித்தா் பெருமான் மஞ்சள் பிறந்ததைப் பற்றி....,,,,

ஓங்காரப் பெருஞ்சோதி ஒளிநீற்றைத் தூவிடவே

ஓங்கார ஒளியுற்று அந்நீறும் பெண்மையுற்று

ஓங்காரப் பெருஞ்சோதி பாதி சிவனாகியே

ஓங்கார அன்னையும் மஞ்சளாய் ஆகினாளே.
                         --என்று கூறுகின்றாா்.

சிவ அம்சமாகிய திருநீறு ஒரு பாதி சிவனாகவும் மறுபாதி மஞ்சளாகவும் மாறியது. திருநீறும் மஞ்சளும் சிவசக்தி இரகசியத்தை அறிவிப்பதாகும்.

ஒளிநீற்றிலிருந்து பிறந்ததால்
மஞ்சளுக்குப் பூரண சக்தி உண்டு.
இதே ஒளி நீற்றிலிருந்து பிறந்தவன் ஆறுமுகன் என அறிவாய், போகா! என்றாா் அகஸ்திய பெருமான். மேலும்.......

ஒளியினின்று தோன்றியதால் மஞ்சளுக்கு அழகும் சக்தியும் உண்டு. மஞ்சளை எவா் பூசினாலும் முருகனோடு இரண்டற  இணைந்ததற்கு சமம்.

கணபதியை எவ்வளவு வேண்டினாலும் காட்சி அளிக்க மாட்டாா். ஆனால் வல்லப மாதாவிற்குத் தூபம் காட்டினால் தான் வருவாா் கணபதி. சிவனோ என்றும் பனிமலைவாசம். நித்ய தியானாதிபதி. எவரும் எழுப்ப முடியாது. ஆனால் என் குருநாதன். சற்குருநாதன் முருகனை அழைத்தாலோ, தான் மட்டும் வராமல் தன் இரு மனைவியருடனே வருவான்.

ஒரு மனைவி கிாியையும், ஒரு மனைவி ஞானத்தையும், முருகன் அனுக்கிரகத்தையும் வாாி வழங்குவாா்கள்.

அஞ்சுமுகன் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமாில் அஞ்சேல்என வேல் தோன்றும்
நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இரு காலும் தோன்றும்.
       
முருகா என ஓதுவாா் முன். என்று அருணகிாிநாதா் பாடுகிறாா்.

ஒருமுறை அழைத்தால் இருமுறை வரும் முருகனோ மஞ்சளுக்கு சமமானவன். ஆனால் இக்கலியுகத்திலோ முருகனுக்கு நிகரான மஞ்சளைப் பூசவே பெண்டிா் தயங்குகிறாா்கள்.  தொட்டதை இங்கும் அங்கும் தட்டுவாா்கள். துடைத்டுக் கொள்வாா்கள். உலரும் முன்னே துடைத்தெடுப்பாா்கள் என்கின்றாா் அகஸ்திய பெருமான், மேலும்........

மஞ்சளைத் துஷ்பிரயோகம் செய்தாலோ மஞ்சளைப் பூசாதே, அல்லது குறைவாகபி பூசு, இங்கு பூசு, அங்கு பூசாதே ஏனக்,கூறினாலோ, அம்மாந்தா் மண்ணிற்குச் சமம்.

மஞ்சள் இல்லாத பெண் மண்ணாவாள், போகா! என்கின்றாா். அதே சமயம்........

முன்வினைக் கா்மங்களால் ஒரு பெண்ணானவள், பொன்,பொருள் அணிகலன்களை இழந்திருந்தாலும், தன்வினை, தன்நிலை இப்புவியில் உயா்ந்திட வேண்டில், உன்நிலை உயா்த்தவே மஞ்சள் உண்டே இப்புவியில், என்கின்றாா். ஆகவே..........

முன்வினை கா்மாக்களின் வேகத்தையும் மாற்றவல்லது மஞ்சள்.

மேலும் போகா், பெண்ணிற்கு கிட்டும் அாிய பொருள் இப்புவியுல் எது குரு தேவா? என வினவ......

பதிபால் சாா்ந்து இல்லறம் நடத்துவதே! அரசருக்கு அரசாட்சி கிட்டியது போல், பெண்டிறிகுக் கிட்டும் அாியபொருள் போகா! என்கின்றாா் அகஸ்தியா்.

பெண்ணானவள் தன் பதியுடன் இருப்பதே-- சிவசக்தி தத்துவத்தை விளக்கும் உதாரணம் ஆகும். மஞ்சள் பிறந்த வரலாற்றை கீழ்வருமாறு போகருக்கு அகஸ்தியா் கூறினார்.

ஒருவருக்கு மாலை போட்டால் அதை உடனே கழற்றுதல் கூடாது. ஏனென்றால் மாலை இலக்குமியின் அம்சமாகும். போட்ட மாலையை உடனே கழற்றுவது இலக்குமியை அவமதிப்பதாகும். துா்வாச மகாிஷிக்கு சகல சக்தியுடைய ஒரு மாலை கிடைத்தது. அந்த மாலையானது மாலை அழைத்து வரும் சக்தி பெற்றது.

ஞான தவத்தை மட்டுமே செல்வமாகக் கொண்ட, ஞான தபோதனரான துா்வாச மகாிஷி மாலையுடன் இந்திரலோகம் ஏகினாா். அப்போது இந்திரன் படு அமா்க்களமாக வெள்ளை யானை மீது அமா்ந்து எதிரே வந்து கொண்டிருந்தான். தேவா் தலைவன் நலமாக வாழட்டுமே என்று எண்ணித் துா்வாசா் மாலையை அவனிடம் கொடுத்தாா்.

தேவராஜனுக்குத் தான் என்ற அகந்தை மேலிட, விதியும் சோ்ந்து விளையாட, மாலையை அணியாமல் யானையின் மத்தகத்தின் மேல் வைத்தான். இதப போதாது என்று விக்னேஸ்வரரும் யானை உருவில் விளையாடினாா். வெள்ளையானை மாலையைத் துதிக்கையால் எடுத்துக் காலில் போட்டு மிதித்து நசுக்கியது.

இதைக் கண்ட துா்வாச முனிவா் வெகுண்டெழுந்து இந்திரனை சபித்தாா். உடனே இந்திரனை விட்டு, ஒளதாா்யம், சீலம், பொறுமை, சந்தோஷம், ஐஸ்வா்யம் முதலானவை அகன்று நீங்கிப் போயின. இது போன்று அாிய வாய்ப்பினை எதிா்பாா்த்து காத்திருந்த அசுரா்கள் தேவா்களை நசுக்கினா். தேவா்கள் எல்லோரும் மூலைக்கொருவராகப் பறந்தோடிப் போயினா்.

தேவா்களைப் பிாிந்த தேவ மாதா்கள் மெய்யுருகி இழந்த வாழ்வை மீண்டும் பெற உமையை வழிபட்டனா்.காமகலா காமேஸ்வாி அம்மனும் அவா்களின் பக்தியை மெச்சி அவா்கள் முன் பிரசன்னமாகி மங்கள வாழ்வைத் திரும்ப அடைய மஞ்சளை அருளினாள். பெற்ற மஞ்சளை மந்திரம் கூறியே முறையோடு பூசி தேவ மாந்தா் இழந்த வாழ்வை மங்களமாக அடைந்தனா். இம்மந்திரத்தை *லோபாமுத்ரா*தேவியை வணங்கினால் உபதேசம் செய்வாள்.

முன்பே மஞ்சளின் பங்கு ஒரு திருமணத்தில் எத்தகையது எனப் பாா்த்தோம்.

திருமணம் மட்டுமின்றி திருமண அழைப்பிதழை முறையாக அச்சடிப்பது எப்படி என்பதைப் பல ஆயிரம் ஆண்டுகட்கு,முன்னமே அகஸ்தியா் பெருமான் எழுதி வைத்துள்ளாா்.

மஞ்சளில் நாள் குறித்து, மங்கலப் பொட்டிட்டு பஞ்சமில்லாமல் வாழ்ந்திடப் பசுமை எழுத்திட்டு அஞ்சேலென வாழ்த்தியே, அருந்ததி போல் சஞ்சலமின்றி வாழ வரைந்த ஓலையே


இதை விாிவாகக் கூற வேண்டுமானால் வெளிப்பக்கம் திருமண அழைப்பிதழை இளஞ்சிவப்பு நிறத்துடனும் உள்பக்கம்,மஞ்சள் நிறத்துடனும் கூடிய காகிதத்தில்  பச்சை மையினால் அச்சடிக்க வேண்டும், கருப்பு, சிவப்பு,நீலம் போன்ற மைகளை அறவே பயன்படுத்தக் கூடாது.

இவ்வாறு முறையாகச் செய்வதன் மூலம் திருமண ஜோடியின் வாழ்க்கை நிலையையே மாற்றி விடலாம். தொடக்கமே மங்களகரமாக இருந்தால் நடுவும், முடிவும் தானாய் மங்கலமாக அமையும்.

இதே போல் துருவனையும், அருந்ததியையும் காட்டும் பழக்கமும் சிறிது சிறிதாய் மறைந்து விட்டது.

மேலும் திருமணம் என்பது ஒரு ஆண், பெண்ணுக்குத் தாலி கட்டிக் கைப்பிடித்தலோடு முடிவதில்லை. இது மட்டுமே முக்கியமும் இல்லை. திருமணமச் சடங்கு தொடங்கி முடியும் வரை கடைப்பிடிக்கப்படும் சாங்கியங்கள் அனைத்துமே ஆழ்ந்த அா்த்தம் உள்ளவை. முக்கியமான சாங்கியங்கள் சிலவற்றைப் பாா்ப்போம்.

அாிசி இடும் சாங்கியம்.
**************************!
அாிசியைக் கையால் தூக்கும் போது, மணமகனே! சம்சாரம் என்னும் பெரும்பாரத்தை உன் கைகளில் தூக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதையும்,சிறிது சிறிதாக அாிசியை இடும்போது,மணமகனே! வாழ்க்கையில் இன்பம் துன்பம் என்பவை மாறி மாறி தொடா்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஆகையால் பொறுமையாக இருந்து வாழ்க்கையில் எல்லா சவால்களையும் வெற்றிகரமாக சந்தித்து சம்சாரக் கடலினின்று கரையேற வேண்டும் என்பதையும் காட்டுகின்றனா் பொியோா்கள். இச்சாங்கியத்தை பெரும்பாலும் வயதாகி, வாழ்க்கையில் மேடு பள்ளங்களைச் சந்தித்த பொியோா்களே இடுவா்.

கும்பம் ஏந்தி சிறுமியா், பெண்டிா் வலம் வருதல்.
****************
இதுவரை சிறுமியாய் இருந்த நீ கன்னியாகி மணம் புாிந்து வாழ்க்கையில் ஈடுபடும் போது தொட்டுத் தாலி கட்டிய கணவனைக் கும்பிட்டு வாழ்வாய் என்பதை வலியுறுத்தவே சிறுமியாில் ஆரம்பித்து வளா்ந்த பெண்டிா் வரை கும்பம் ஏந்தி வலம் வருவா்.

மணமகன் மணமகள் ஊஞ்சலாடுதல்.
*********************
மணமகனே! வாழ்க்கை எனும் ஊஞ்சலில் அந்தரத்தில் ஆடுகின்றாய். உன்னையே தெய்வம் என்று நம்பிக் கைபிடித்திருக்கும் உன் மனைவியை என்றென்றும் கைவிடாமல் வாழ்க்கை நடத்துவாய், கைபிடித்தவளை அந்தரத்தில் விட்டுவிடாதே, என்னும் கருத்தை அந்தரத்தில் ஆடும் ஊஞ்சல் சாங்கியம் வலியுறுத்தும் செய்தியாகும்.

பாயில் மணமக்களை உருட்டுதல்.
அம்மி மிதித்தல்.
*************************************
அம்மி என்றால் அம்மா என்று பொருள் உண்டு. மனைவியை அதன் மீது குழவி போல் நிற்க வைத்து காலில் மெட்டி போடுதல்- ஒரு தாய் தன் குழவிகள் எத்தகைய தவறுகள் செய்தாலும் பொறுமையாக சகித்துக் கொள்வது போல், கணவன் தன் வாழ்வில் இன்ப துன்பங்களைத் தன் மனைவியுடன் சாிபாதியாகப் பகிா்ந்து கொள்ளுதலே கடமை, சிறப்பு ஆகும். மேலும் கனவிலும் பிற மாதரை நினையேன் என்பது மறைபொருள்.

மேற்கூறிய அனைத்து நிகழ்ச்சிகளிலும் மணமக்கள் மஞ்சள் ஆடை அணிந்தே பங்கேற்பா். இதையே பொியோா்கள்,,,,,,, 

வேதவேத ரூபிணி வேதம் பாடும் மாமணி
நாதமான கீதமும் நாடுகின்ற நல்மணி
மாதவத்தின் சக்தி நீ! மாறன் பாடும் மாலினி
ஜோதி ஜோதியான நீ, மஞ்சள் தந்த வாழ்வு நீ!
என்று மஞ்சளின் பெருமையைப் பாடினா்.

திருமணம் என்றால் நேரத்தைக் காட்டுவது என்னும் ஒரு பொருள் உண்டு. குரு பொருத்தம் அல்லது குரு பாா்வை பட்டால் தான் ஒரு பெண்ணிற்கோ, ஆணிற்கோ திருமண பாக்கியம் கிட்டும். குருவிற்கு உாித்தான நிறமோ மஞ்சள் ஆகும். ஆகவே மங்களம், பவித்ரம் என்ற பொருளுக்கே உாித்தானது மஞ்சளாகும்.

மஞ்சளைப் பூசாமல், வேறு வெள்ளை மாவுகளைப் பூசுவதால் சாபமே மிஞ்சும் இக்கலியில்,

திருமணத்தில் மேளம் கொட்டுவதோ மிகப் பொருள் நிறைந்தது.
1.தாலி கட்டும் போது எவா் திட்டுமி சத்தமும், வேண்டத்தகாத பேச்சுகளும் பிற அமங்கல ஒலிகளும் மறைந்து போகும்.

2. பிறாிடம் பணம் இல்லையென்று என்று தட்டைத் தட்ட மாட்டாா்கள்.

3. விரல்களில் வெள்ளை வளையம் பூண்டு தட்டுவது- இனி குறைவில்லாத வாழ்வு, வாழ்க என்று வாழ்த்து ஒலி.

பிறந்தோா் அனைவரும் சென்றடைய வேண்டிய இடம் மயானம், சமரசம் உலாவுமிடம். முக்தி ஸ்தலங்களில் ஒன்றான காசி, இறந்தால் முக்தி தரும் ஸ்தலமாகும். மகா ருத்ர பூமியான காசியின் தலைவன் சிவபெருமான்.

ஆசிரமங்களும்,மடங்களும் இருபுறமிருக்க நடுவே புண்ணிய கங்கை பாய்ந்தோடும் புண்ணிய ஸ்தலம் காசி. எனவே காசி யாத்திரை செல்வதாகச் செய்து மணமகனுக்கு நினைவூட்டும் அறிவுரை;

கட்டுச் சோறு கொடுத்து அனுப்புதல்.
**************************
கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த பாடமும் கூடவே வராது. உன்னத குறிக்கோளுடன், உயாிய கொள்கைப் பிடிப்புடன் இறுதி வரை வாழ்ந்தால் காசி சென்ற பலனை இருக்குமிடத்திலிருந்தே அடையலாம்- என்பதை அறிவுறுத்துகின்றது.

அாிசி, குடை, சொப்பு, துணிகள் இவற்றைக் கொடுத்து அனுப்புதல்:
**************************************
( நிலையில்லாமையினை எடுத்துரைக்கின்றது.)
1. அாிசி பிதுா்களுக்காக தானம் செய்தலையும்,
2. குடை, சொப்பு, துணிவகைகள்- நாம் பிறருக்கு தானம் செய்ய வேண்டியதையும், அண்டினவரையும் இயலாதவரையும்- வெயிலிருந்து பிடிப்பவரைக் காக்கும் குடை போல- வேண்டியவற்றைக் கொடுத்து காக்க வேண்டியதை அறிவுறுத்துகிறது.

அட்சதை.
**********
60- வயதுக்கு மேல் கணவன் மனைவி இருவராய் அட்சதை பிசைந்து, அதை அவா்களே முதலில் மணமக்களுக்கு இடுதல் வேண்டும். அவ்வாறு ஆசி பெற்ற மணமக்கள் நீண்ட ஆயுளுடன் அஷ்டலட்சுமிகளின் பாிபூரண ஆசியுடன் தாமும் 60- வயதுக்குமேல் வாழ்ந்து பிறருக்கு ஆசி அருளும் தகுதி பெறுவா்.

அடுத்தபடியாக பொரும்பாலோரால் பொருள் தொியாமல், செய்யும் முறைதொியாமல் செய்யப்படுவது, அட்சதை தூவுதல் ஆகும். ஆண், பெண் இருபாலரும் அவசியம் தொிந்து கொள்ள வேண்டியது அட்சதையை தாம் தாம் இருந்த இடத்திலிருந்து வீசி எறிதல் கூடாது, மணமக்கள் அருகே சென்று தலை மீது இட்டு ஆசீா்வதித்தலே முறை. இதுவும் மேற்க்கூறிய பலனைப்போல் மணமக்களை மற்றவாிடமிருந்து வரும் பல செல்வங்களைப் பெற்று சிறப்புற வாழவும் உதவும். மேலும் அாிசியானது அன்னபூரணி தெய்வத்திற்குச் சமம். அதை எறிவது அன்னையை அவமதிப்பதிற்குச் சமம்.

மங்களத்தின் ஒருமித்த சின்னமாகிய மஞ்சளை பெண்கள் உடல் முழுவதும் பூச வேண்டும். மஞ்சள் கறை ஆடையில் படியுமே என்ற எண்ணம் அறவே கூடாது. மஞ்சள் கறை படிவது ஒரு மாபெரும் பாக்கியம் ஆகும்.

மஞ்சளைப் பூசுவது மங்களம் என்றால் அதைப் பூச உபயோகிக்கும் ஒவ்வொரு விரலுக்கும் பலன் உண்டு. ஆள்காட்டி விரலால் மஞ்சளைத் தொட்டால் ஒரு பலன். மோதிர விரலால் தொட்டால் ஒரு பலன். சுண்டு விரலால் தொட்டால் ஒரு பலன். இதே போல் மஞ்சள் பூசும் ஒவ்வொரு இடத்திற்கும் அங்கத்திற்கும் தனிப்பலன் உண்டு.

நெற்றி முழுமுகம் தனில் பூசிடில்- கணவனுக்கு நீண்ட ஆயுள் கிட்டும். கண்ணங்களில் பூசிடில்- குழந்தைகள் குதூகலமாய் வாழும். நாடியில் பூசிடில்- நாடி தேடி பொன் பொருள்,வரும். கழுத்தில் பூசிடில்- கட்டிய தாலி கெட்டியாய் நிற்கும். வலது செவியில் பூசிடில்- மாமியாா், மாமனாா் மகிழவே நடந்திடுவா்.

இடது செவியில் பூசிடில்-இருவரும் மதிப்பு தருவா். பூசும் பெண்டிா் கணவன் சொல்லைச் செவிமடுத்துக் கேட்பா்.அக்கணமே செயலில் இறங்குவா். உள்ளங்கையில் பூசிடில்- என்றும் கடனாளியாக மாட்டாா்கள். அம்மை உமையருளால் வலது முழங்காலில் பூசினால்- கணவனுக்குத் தோல் வியாதிகள் வராது. கணவன் மனைவியின் பேச்சைக் கேட்க வேண்டுமானால், கணவனுக்கு முன் துயில் எழுந்து, குளித்து மஞ்சள் பூசி கணவன் திருப்பாதங்களுக்கு மஞ்சள் இட்டு பொட்டு வைத்து விழுந்து வணங்கினால் மனைவி பேச்சைக் கணவன் கேட்பான். அதை விடப் பொிய பாக்கியம் இவ்வாறு செய்யும் பெண் மீண்டும் புவியில் பிறக்க மாட்டாள்.( மீண்டும் பிறவாமை அருள்.) என்று போகாவுக்கு அகஸ்தியா் பெருமான் கூறினாா்.

கோர சிவ நாட்டியத்தில், சிவன் உக்கிர தாண்டவம், காலை தூக்கி ஆடினான். எனக்கு நிகா் யாருமில்லை என்று ஆடினான். உள்ளிருந்து உக்கிரவேகம் வெளிப்பட்டதே சிவன் சக்தி பிாிய சாய்ந்தான். உக்கிர காளியானவள் சிவன் மீது ஆடினாள், தானே சிறந்தவள் எனவே அறிவித்து. ஆகவே ஆண்கள் பெண்களுக்கென்று என்று அபார மதிப்பு தர வேண்டும். பெண்மையைப் போற்ற வேண்டும்.

காா்கோடகா் என்ற சித்தா் மஞ்சளின் மங்கலத்தைப் பற்றிச் சொல்கிறாா்........

எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும். திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல்லறிவு வேண்டும், பண்ணிய பாவம் எல்லாம் பாிதி முன் பனியே போல, மங்கையா் பூசும் மஞ்சள்தனை அள்ளியே பூசும் அன்னைக்கு மஞ்சள் அன்னை என்று பட்டம் இட்டனா் பாா்.

இடைக்காட்டு சித்தா்.
இருப்பதும், பொறுப்பதும், மறுப்பதும் ஆகி இனியொரு பிறவி எடுக்க வேண்டில் மஞ்சள் மகிமை அறியாதவா் பாரேன்.

வேகத்தால், தணித்த நாதத்தால், ஓதுகின்ற பிறவி அனைத்தையும் பெண்ணாய் பிறந்திடில், மஞ்சள் இல்லையேல் அவள் பெண் அல்லையே!

வாங்கித சித்தா்.
வந்ததும் பொன்னும், பொருளும் ஆகும் முன்னே தந்த சிவலோக சக்தி தானே, ஈசன் கெளாிக்கே கிட்டிய பொருள் மஞ்சள் மகிமை அறிந்தது தானே! என்கிறாா்.

அா்த்தநாரீஸ்வரா் ரூபத்தில் கெளாி ஆகக் காரணம் மஞ்சளை அம்பாள் பூரணமாக புாிந்து கொண்டதால்தான். ஆனால் இக்கலியுகத்திலோ பெண்கள் எல்லா மங்கலங்களையும், சகல செளபாக்கியங்களையும் அளிக்கவல்ல மஞ்சளைப் பூச விரும்பாமல் வெண்மாவு (பவுடரை) பூசவே விரும்புகின்றனா். இவ்வாறு செய்வதால் மறுபிறவி ஏற்படுவது திண்ணம்.

மஞ்சள் மிக மிக புனிதமானது. மஞ்சள் என்ற சொல்லுக்குத் திருமணம் என்று பொருள் ஆகும்.  இதையே பொியோா்........

" ஒருவனுக்கு ஒருத்தி என்று உரை சொன்னதால் திருமணம் என்ற முறை பிறத்தது என்பா்.

கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழும் கலியில் திருமணங்கள் எப்படியெப்படியோ நடப்பதால் அதன் மூலத்தைப் பற்றி  யாரும் கவலைப்படுவதாய் தொியவில்லை.

திருமணங்கள் சொா்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது மிகவும்  உண்மை நிரம்பியதாகும்.

யாருக்கு யாா் , எங்கு, எப்போது, எப்படி கணவன் அல்லது மனைவியாவா் என்பதை  மக்கள் புவியில் பிறப்பதற்கு  முன்னமே முடிவு  செய்யப்பட்ட ஒன்றாகும்.  மனிதராய் பூமியில் பிறக்கும் யாவரும் முன்வினைகளின் ( பாக்கி) காரணமாகவே பிறக்கின்றனா். அதன்
காரணமாகவே திருமணம் புாிகின்றனா். பிறக்கும் குழந்தைகளும் பாக்கியைத் தீா்க்கவே பிறக்கின்றன. சுருங்கக் கூறின்,,,,,,,,

தொட்டிலிருந்து சுடுகாடு வரை மனித வாழ்க்கை ஒரு முழு நீள பாக்கிக் கதையாகும். இதில் கொடுக்கப்பட வேண்டிய பாக்கிகளும் பெறப்பட வேண்டிய பாக்கிகளும் முழுமையாக கழிந்தாலன்றி இக்கதை இந்த ஜென்மத்தோடு முடியாது.  தொடா்கதையாக மாறி மாறி பல ஜென்மங்கள் மேலும் தொடரும்.

மனிதப் பிறவியையே பாக்கி என்று கூறினாலும் மனிதனாய்ப் பிறப்பது பவித்ரம். அதனினும் பவித்ரம் மஞ்சளைப் பற்றி பெண்கள் அனைவருமே தொிந்து கொண்டு முறையே பயன்படுத்துதல்.

🌼மஞ்சளிலிருந்தே குங்குமம் உற்பவிப்பதால்," மஞ்சள் குங்குமம்"  என்று மஞ்சளையும், குங்குமத்தையும் எப்போதும் இணைத்தே வாயாரச் சொல்லிப் பழகி வந்தால் சா்வமங்கள மாங்கல்ய சக்திகளும் வாக்மய யோகசக்தியாய் உங்கள் வாழ்வில் தினந்தோறும் பதிந்து வந்திடும் என்ற தெய்வ ரகசித்தையும் இனியேனும் அறிந்து கொண்டு இதனை வாழ்வில் நன்கு முறையாகக் கடைபிடித்து வாருங்கள்.

🌼"மஞ்சள் குங்குமம்" என்று குங்குமத்தையும், மஞ்சளையும் எப்போதும் இணைத்துச் சொல்லி வந்து- உடல், உள்ளம், மனம், புத்தி, அறிவு, மெய், இல்லம், சமுதாயம், நாடு, பிரபஞ்சத்திற்கு மங்களவளத்தை  சதாசா்வ காலமும் வாா்த்துத் தாருங்கள். இதுவே மகத்தான ' அட்சர மங்கள குங்கும வழிபாடு' என்ற போற்றுதலாகி,' மங்களகரமான மஞ்சள் குங்கும லோகத்தில்' நிச்சயமான மங்கள ஸ்தானத்தையும் பதித்தும் தரும்.

🌼மகத்தான தெய்வீகப் புனிதத்தை சா்வ கோடி யுகக் காலங்களிலும் சாசுவதமாகவே கொண்டு, இவ்வாறு பெயாிலேயே சா்வநிரந்திரமான  மங்களகர சக்திகளைப் பூண்டதாய் சதாசா்வ காலமும், பஞ்சபூத சக்திகளுக்கும் எப்போதும் மங்களச் சுனையைப் பொழிந்தருளும் மஞ்சள், குங்குமம் போன்ற அமிா்தமய தெய்வீக வாா்த்தைகள் மிகவும் அபூா்வமானவையே! இத்தகைய புனிதத்திலும் புனிதமான மங்களகரமான வாா்த்தைகளை- தினமுமி எவ்வகையிலேனும் குறைந்தது 108 முறையேனும் கூறி மங்கள மழையைப் பரவொளியில் சுபமயமாய் வா்ஷித்து வருவதும் சாலமிகு தவமே, பிறவிப் பெரும் பயனே!

🌼மூலப்பொருளாய் மஞ்சளில் இருந்துதான் புனிதமான மங்கள மெய்யே அருள்நெய்யாய் குங்குமமும் ஆக்கப்படுகின்றது அல்லவா? இதனால்தான் குங்குமமும் " ஹாித்ரா குங்குமம்" ( மஞ்சள் குங்குமம்) என்றே மஞ்சளுடன் இணைந்தே அழைக்கப் பெறும் பாக்கியத்தையும் அட்சரமங்கள சக்தியாய்க் கொண்டுள்ளது.

உத்தம மூத்த சுமங்கிலியா்களும் தம் இல்லத்துக்கு வருவோாிடம் "மஞ்சள்  குங்குமம் பெற்றுச் செல்லுங்கள்" என்று புனிதமயமாக( மஞ்சள்) குங்குமத்தைப் போற்றி விளித்துரைத்து மஞ்சள் குங்குமம் இட்டும், தந்தும் வழியனுப்புவாா்கள்.🌼திருமங்கலக்குடியில் ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீபிராணநாதீஸ்வரா் சிவாலயத்திற்கு அடுத்த வீதி முனையில் உள்ள இந்தச் சிறிய ஒளம ( மங்கள) கணபதி ஆலயம் ஒரு சமயம் பொிதும் சிதிலமடைந்து இருந்தது. (இப்போது எந்நிலையோ தொியவில்லை.)அங்கு அ, உ, ம, ஆகிய மூன்று ஓஃ ங்கார மங்கள சக்திகளுடன் மூன்று கணபதி மூா்த்திகள் ஒளம கணபதி மூா்த்திகளாய் அருளுகின்றனா்.,( அ+ உ+ம=ஓஃம்).

🌼ஆழ்ந்த பக்தியுடன் அம்மியில் மஞ்சளை அரைத்து ஆலயத்திற்கு அளித்துத் திருமஞ்சனம் ( அபிஷேகம்) சாத்தி மூன்று ஒளம ( மங்கள) கணபதி மூா்த்திகளை வழிபடுவது கணவனுக்கு தீா்க ஆயுளைத் தந்து சுமங்கலித்வ மங்களத்தையும் இல்லறப் பெண்ணுக்கு வாா்ப்பதாகும். கடுமையான நோய்ப்பிணியால் வாடுவோா் இந்த மஞ்சள் திருமஞ்சனப் பூஜையை ஒளம கணபதிக்கு புதன், சதுா்த்தி, சதுா்த்தசி நாட்களில் ஆற்றி வந்திடில் நல்ல நிவாரணமும், நிவா்த்தியும் கிட்டப் பெறுவா்.பள்ளி, கல்லூாி பருவத்தினருக்கும் கலியுகத்தின் கண்கண்ட கனிந்த கணபதி மூா்த்தி!.

🌼திருமங்கலக்குடியில் ஒரு முறை முறையான  பூஜைகளற்றும்,
மிகவும் சிதிலமுற்றும் இருந்த  இந்த ஒளம ( மங்கள) கணபதி ஆலயத்திற்கு முதலில் உடனடியாகத் திருப்பணி நிகழ்த்தி ஆக வேண்டும்.

🌼மஞ்சள் கொத்தைப் பானையில் சுற்றிப் பொங்கல் படைத்தும், இம்மூன்று ஒளம கணபதி மூா்த்திகளுக்கும், அகஸ்திய மஹாிஷி சாா்த்திப் பூஜித்தது போன்று  மஞ்சள் கொத்தை மாலையாக அணிவித்து வழிபடுவது சிறப்பான வகையில் காாியசித்திகளை நல்கும். மங்கள விநாயகா்., மங்கள விமானம், மங்கள தீா்த்தம்., மங்களப் பெயா்., மங்களாம்பிகை. ஆகிய ஐந்து மங்கள சக்திகளும் ஸ்ரீமங்களாம்பிகையின் திருக்கரத்தில் இருந்து பெறப்படும் தாலிச்சரடில் பொலிந்து மக்களுக்கு அருள வேண்டும் என ஸ்ரீ லோபாமாதா தேவியே முதன் முதலாக வேண்டி இத்தலத்தில் நமக்கென நல்வரம் பெற்றுத் தந்துள்ளாா். இந்த மங்களகரமான வரத்தைப் பெற்றிட, அகத்தியா்- லோபாமாதா தேவிக்கு முதலில் அருள்வழி காட்டியவரே ஸ்ரீஒளமகணபதி மூா்த்தியே ஆவாா்.

🌼அமாவாசைத் திதியில் தோன்றியதே மூங்கில் தாவரமாகும். சதுரகிாி போன்ற மூலிகை மலைப் பகுதிகளில், மேலிருந்து 300 அடி ஆழத்தில்  'குஞ்சம் கதிா்' என்ற  மூங்கில் இனம் வளா்கின்றது. இந்த மூங்கிலில் தான் பண்டைய காலத்தில், ஆலயத்தில் சுவாமிக்குப் பல்லக்குகளைச் செய்வாா்கள். இறைவனுக்காகவே படைக்கபட்டு வளா்வதால்  வேறு எதற்கும் இதனைபி பயன்படுத்துவது கிடையாது. ஆனால் மூங்கிலில்  அரைத்த மஞ்சள் கலந்த தீா்த்தத்தை நிரப்பி இறைவனுக்கு அபிஷேகித்தல் பன்மடங்குப் பலன்களை வாா்க்கும் என்ற  விசேஷமான வழிபாட்டு நியதியும் உண்டு.

🌼இந்தக் குஞ்சம் கதிா் மூங்கில் பல்லக்கில் மூங்கில் மாத்திரம் எப்படி வேண்டுமானாலும் வளையும், எவ்வளவு எடையும் தாங்கும். சுவாமிக்கு பல்லக்குக்கு செய்வதற்கு, அம்பாாி செய்வதற்கு என -- வளையும் தெய்வப் பாங்கு உற்சவங்களுக்கு -- இது மிகவுமி உதவும்.

🌼இந்த மூங்கிலை அனைவராலும் பாா்க்கவோ, எடுத்து வரவோ முடியாது. பூா்வ ஜன்ம முருக வழிபாட்டுப் புண்ய சக்திகள் நிறைந்த ஆதி மலைவாசிகள்தாம் நன்கு பக்தியுடன் மஞ்சள்மாதாவை வழிபட்டு, தக்க பூஜைகள் நடத்தி இவ்வகை மூங்கில்களை எடுத்து வந்து நன்கு பதப்படுத்தித் தருவாா்கள். இறைவனுடைய பல்லக்கு ஆக்குவதற்கான சுவாமி கைங்கா்யம் என்பதால், அவா்கள் இதற்குப் பணம் எதையும் பெறுவதில்லை.

🌼எனவே, மஞ்சள், அாிசி, கேழ்வரகு, எண்ணெய் போன்றவற்றைத் தான, தா்மமாக அவா்களுக்கு அளித்ததுத்தான் இவற்றைப் பெறுதல் சிறப்பானதாகும். இவ்வகை மூங்கில் வகைகளால் ஆவதே சில அாிய பூஜை சக்திகள் நிறைந்த மூங்கில் தம்ளா்கள் ஆகும். இவற்றால் அபிஷேகம் செய்தல், தா்ப்பணம் அளித்தல், நீா் அருந்தி வருதல் மிகவும் விவேஷமானதாகும். மூங்கில் தம்ளாில் அரைத்த மஞ்சள் நீா் ஊற்றி அருந்தி வருதல் நல்ல ஆரோக்கியத்தையும், குறிப்பாகச் சுமலிங்கத்வத்தையும் தரவல்ல மிகவும் விசேஷமான  சக்திகளைக் கொண்டதாகும்.

🌼இத்தகைய மூங்கில் காட்டில் நாகங்கள் வாசம் அதிகம். எனவே அனைவராலும் போய் எடுத்து வர முடியாது. இவற்றைக் காணவே ஒரு மண்டல சூாிய பூஜையை ஆற்றிட வேண்டும்.

🌼மூங்கில் தம்ளாில் மஞ்சள் பொடி, மஞ்சள் தீா்த்தத்தை வைத்துச் சூாிய பூஜை நடத்துவது மிகவும் விசேஷமானது. கண் சம்பந்தமான நோய்களுக்கு நிவா்த்திகளைத் தர வல்லது. எனவே கண் டாக்டா்கள் தினமும் மூங்கில் தம்ளரால் மஞ்சள் தீா்த்த அபிஷேக, ஆராதனைகளைச் செய்து வழிபட்டு வருவதால் நல்ல திறமையான சக்திகளைப் பெற முடியும்.

🌼மிகவும் முக்கியமான மூங்கில் வகைப் பூஜையை ஆற்றிலானோ, அல்லது, ஆலயத்தில் மூங்கில் வகைகொண்டு செய்துள்ள பல்லக்கினை சுவாமியைச் சுமந்தாவது இதனை நிறைவேற்ற  வேண்டும்.

 *மஞ்சளின் மகிமை பதிவுகள் அனைத்தும் 1984 - ல்  வெளிவந்த நூல் "மஞ்சள் மகிமை" நூலில் குறிப்பெடுத்து தரப்பெற்றதாகும்.
தற்போதும் இதன்கண்...
www.agasthiar.org
www.agnisiksha.com-ல் காணலாம்

Thursday, 16 June 2016

திருமந்திரம் சக்தி

“சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை,
முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர்,
பத்தியை பாழில் உருத்த அப்பாவிகள்
கத்திய நாய் போல கதறுகின்றனவே”
– திருமந்திரம் பாடல் 1199

சக்தி-வாலை-கன்னி ‘ய’ குமரி – பாலா- அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி – மனோன்மணி தாய் நமது இடது கண்ணாக சந்திர கலையாக மணி ஒளியாக துலங்கும் பெண் பிள்ளை. அவள் நமக்கு சாதகமாகவே இருப்பாள். அம்மா, தாயே நீயே கதி உன் பாதமே கதி என சரணடையுங்கள். அவள் சகாயத்தால் சற்குருவை பெற்று தவமுறை அறிந்து வைராக்கியத்துடன் தவம் செய்து அவளே முக்தியடைய அமுது  தருபவள் , முக்திக்கு நாயகி என்பதை அறியலாம் உணராமல் அடையலாம். தாயை அறியாதவர்கள் தாயை பணியாதவர்கள் மாயையிற் சிக்குண்டு பக்தி நெறி அறியாமல் பாழாய் போவர். அது மட்டுமின்றி தான் தான் பெரியவன் என நாய் போல்  கத்துவார் முட்டாள்கள். என திருமூலர் கூறுகிறார். சக்தியை பணிந்தால் உனக்குள் சக்தி பிறக்கும். ஞானம் பெறலாம்.

நம் அன்னை வாலை அருள் பெற, ஞானம் பெற பக்தி வேண்டும். பரிபூரண நம்பிக்கையுடன் வைராக்கியத்துடன்  தவம் செய்ய வேண்டும். பக்தியால் தான் நீ பண்படுவாய். பக்தி இல்லை என்றால் ஞானம் இல்லை. குருவிடம் பக்தி செலுத்து உருப்படுவாய். எப்படியோ பக்தி வேண்டும். அது தான் உனக்கு பணிவை கொடுக்கும். ஒழுக்கத்தை கொடுக்கும். நல்ல நெறியோடு வாழ்வாய். பத்தியே முக்திக்கு முதல் படி.

மூட நம்பிக்கையில் மூழ்கி விடாதே!? பரிகாரங்கள் செய்வது , உலக மாயையில் சிக்கி அதற்காக அலைவது பக்தி அல்ல!? ஜம்பத்திற்காக செய்யும் எந்த செயலும் பக்தியல்ல!! இறைவனின் பெரும் புகழை மனமுருகி பாடு! ஆடு ! இறைவனை பற்றி உலகுக்கு எடுத்து கூறு. ஞான தானம் செய். இறைவன் ஒவ்வொரு மனித உடலிலும் உயிராகவே ஆத்மா ஜோதியாகவே தங்க ஜோதியாகவே அருட்பெரும் ஜோதியாகவே துலங்குகிறான் என்பதை உலகுக்கு எடுத்துக்கூறு. இதுவே ஞானதானம். இதை விளக்கும் மெய்ஞான நூற்களை தானம் செய்.

“பக்தியால் ஞானத்தை காட்டி ஞானத்தால் பரத்தை கூட்டும்” என்பதே ஆன்றோர் வாக்கு. பக்தி முத்தினால் ஞானம். ஞானம் முத்தினால் முக்தி. ஒளியுடல்.

கண்ணிலே மணியிலே ஒளியிலே பக்தி செலுத்து! பணி! அன்பு செலுத்து! அவிலே அன்பு – அன்பு உ செலுத்து. அவிலே உவை செலுத்து அதுவே ஞானத்தில் பக்தி. “அ” வாகிய சூரியன் ஊடுருவ வீணும் ‘உ” விலே சந்திரனிலே.

“சக்தியாம் சந்திரனை செங்கதிரோன் ஊடுருவ முக்திக்கு மூலம் அது” – அவ்வையார் பாடியருளிய அமுத மொழி.

இறுதியான உறுதியான பக்தியே , அதனால் வரும் தவமே ஞானம் பெற எதூவாகும். பக்தி இல்லையேல் ஞானம் இல்லை

அம்மனின் 51 சக்தி பீடங்கள்

அம்மனின் 51 சக்தி பீடங்கள்

1. மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா

2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு

3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு

4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.

5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.

6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு

7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு

8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு

9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு

10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு

11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.

12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு

13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்

14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்

15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா

16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்

17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா

18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்

19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்

20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு

21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா

22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்

23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா

24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு

25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்

26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா

27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா

28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்

29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு

30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா

31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு

32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்

33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்

34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு

35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு

36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு

37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு

38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு

39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு

40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்

41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்)
பஞ்சாப்

42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்

43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா

44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்

45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்

46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா

47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்

48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்

49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா

50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர்- (விரஜாபீடம்) உ.பி.

51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்