Wednesday, 12 April 2017

ஸ்ரீ எந்திர மகிமை

ஸ்ரீசக்கரத்தின் மகிமை

எந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீசக்கரம் என்பது ஆன்றோர் வாக்கு. ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம், மனித குலத்துக்கு சங்கரரின் அருள்கொடை. காஞ்சி காமாட்சியம்மன் கோயில், திருவானைக்காவல், திருவொற்றியூர் போன்ற எண்ணற்ற தலங்களில் இந்த ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீசக்கரத்தின் மகிமை
மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமே ஸ்ரீசக்கரம். உலகை ரட்சிக்கும் நாயகியான ராஜராஜேஸ்வரி மகாமேருவில் உறைபவள். மகாமேருவின் உருவையே ஸ்ரீசக்கரத்தில் பொறிக்கிறார்கள். மகாசக்தியை மந்திரம், எந்திரம், தந்திரத்தால் வழிபடுவர். இம்மூன்றும் முக்கோணத்தின் மூன்று மூலைகள். அன்னையின் அருளைப் பெற, ஸ்ரீசக்கர வழிபாடே சிறந்தது என்கிறது தேவி புராணம்.

மூன்றின் பலம்
முக்காலங்கள், மும்மூர்த்திகள் அனைத்தும் அன்னையின் அமைப்புகளே. இதன்பொருட்டே திரிபுரசுந்தரியை மகாமேரு என்னும் மந்திரம், எந்திரம், தந்திரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் மூலம் வழிபடு கின்றனர். அனைத்து விதமான சக்கரங் களுக்கும் தலையாயது இந்த ஸ்ரீசக்கரம். அதன்பொருட்டே ஸ்ரீசக்கரத்தினை `ஸ்ரீசக்கர ராஜ’ என்றே ஆன்மிகத்தில் சிறந்த மகான்கள் குறிப்பிடுவர். ஒன்பது நிலைகளைக் கொண்ட ஸ்ரீசக்ரத்தினைப் பூஜிக்கும் முறை நவா ஆவரணம் என அழைக்கப்படும்.

முதல் ஆவரணம்
இந்த ஆவரணத்தின் கிரகமாக வியாழ பகவான் விளங்குகிறார். முதல் ஆவரணத்தை வணங்குபவர்களுக்கு எல்லா செல்வங்களும் நிலைக்கும். தடைகள் நீங்கும். புத்தி பலம் கூடும்.

இரண்டாவது ஆவரணம்
பதினாறு யோகினிகள் வாசம் செய்யும் தாமரைப் பூ ரூபம் இது. மனதின் தீய எண்ணங்கள் நீங்கும். அகம் தூய்மையாகும்.

மூன்றாவது ஆவரணம்
பூஜிப்பவரின் மனதை ஒருமுகப்படுத்தும் தேவதைகள் எட்டு தாமரை இதழ்களில் வாசம் செய்வதாக ஐதீகம். இவர்கள் பக்தியின் மேன்மையை பக்தர்களுக்கு அளிப்பவர்கள்.

நான்காவது ஆவரணம்
இந்த ஆவரணத்தில் 14 யோகினிகள் வாசம் செய்கின்றனர். சந்திரன் வடிவில் அன்னை காட்சி தருவாள். புத்திர பாக்கியத்தை அளிக்கும் ஆவரணம் இது.

ஐந்தாவது ஆவரணம்
பத்து கோணங்களில் பத்து யோகினிகள் வாசம் செய்கின்றனர். உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் தரும்.

ஆறாவது ஆவரணம்
அன்னை சூரியனின் உருவில் இருக்கும் ஆவரணம் இது. பொறாமை இருளை அகற்றி, அருளின் ஒளியை ஏற்ற உதவும்.

ஏழாவது ஆவரணம்
புதன் கிரகம் அமையப்பெற்ற ஆவரணம். இந்த ஆவரணத்தை பூஜிப்பதின் மூலம் ஆத்ம ஞானம் பெருகும்.

எட்டாவது ஆவரணம்
மகா திரிபுரசுந்தரியாக அன்னை வீற்றிருக்கும் ஆவரணம் இது. அங்குசம், பாசம், கரும்பு வில் மற்றும் பாணம் ஆகிய அம்பாளின் நான்கு ஆயுதங்கள் இந்த ஆவரணத்தில் வழிபடப்படுகின்றன.

ஒன்பதாவது ஆவரணம்
பேரின்பத்தை நிலைபெறச் செய்யும் ஆவரணம் இது. அர்த்தநாரீஸ்வரர் வீற்றிருக்கும் இந்த ஆவரணத்தைப் பூஜிப்பதின் மூலம் சகல நன்மைகளும் ஏற்படும்.

Sunday, 9 April 2017

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்

1, "நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே."

வணக்கத்திற்கு உரியவளே! சகலருடைய சித்தத்தையும் கவர்ந்து விருப்பங்களில் செலுத்தும் மஹா மாயையே!
ஸ்ரீசக்கர பீடத்தில் நிலைத்து வசிப்பவளே!
தேவர்களால் வழிபடப்படுபவளே!
சங்கு சக்கரம் கதை இவற்றைத் திருக்கரங்களில் தாங்கியிருக்கும் மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் தாயே!

2,  நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

எல்லோரும் வணங்கும்படியாக கருடவாகனத்தில் ஆரோகணித்து வருபவளே!
கோலாசுரன் என்னும் கொடியவனுக்கு பயங்கரியாகி, அவனை அழித்தவளே! எல்லா பாவங்களையும் அழிக்கும் தேவியே!
மஹாலக்ஷ்மித்தாயே!
உன்னை வணங்குகின்றேன் அம்மா!

3,  சர்வக்ஞே சர்வ வரதே சர்வதுஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவளே!
அனைத்து வரங்களையும் அளிப்பவளே!
எல்லா தீமைகளுக்கும் பயங்கரியாக விளங்குபவளே!
எல்லா துக்கங்களையும் தீர்ப்பவளே!மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் அன்னையே!

4,  சித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

அறிவும் சிந்தனையும் தேர்ந்து எய்தக்கூடிய தெய்வீக வெற்றியினை அருள்பவளே!
மோக்ஷத்திற்கான நல்ல ஞானத்தை அளிப்பவளே!
மந்த்ரங்களின் வடிவாகத் திகழ்பவளே!மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் அம்மையே!

5,  ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி
யோகஜே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

முதலும் முடிவும் அற்ற தேவியே! பிரபஞ்சத்தின் முதல் சக்தியான ஆதிபராசக்தியே!
யோக நிலையில் தோன்றியவளே!
யோக வடிவாகத் திகழ்பவளே!மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் மாதாவே!

6,  ஸ்தூல சூக்ஷ்ம மஹா ரெளத்ரே மகாசக்தி மகோதரே
மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

பூவுலகில் காணும் வடிவங்களாக விளங்குபவளே!
எளிதில் உணரப்பட முடியாதவளே! (பிழைகளைக் காணுங்கால்) எல்லையற்ற கோபம் கொள்பவளே!
அளவிடற்கரிய பெரும் சக்தி என விளங்குபவளே!
பெரும் பாவங்களை அழிப்பவளே!மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் அம்மா!

7,  பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

பத்மாசனத்தில் அமர்ந்தவளே! பரப்ரம்மத்தின் வடிவாகத் திகழ்பவளே! பரமேஸ்வரி என விளங்குபவளே! அகில உயிர்களுக்கும் அன்னையே!
மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் தாயே!

8,  ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகஸ்திதே ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

தூய வெண்ணிற ஆடையுடன் இலங்குபவளே!
பலவிதமான அலங்காரங்கள் கொண்டு திகழ்பவளே!
பூவுலகெங்கும் வியாபித்திருப்பவளே! அகில உலகங்களுக்கும் அன்னையே! மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் அன்னையே!

                   பலச்ருதி
"மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமாந் நர:
ஸர்வஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா:"
"ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம்
த்வி காலம் ய: படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித:
திரி காலம் ய: படேந் நித்யம் மஹா சத்ரு விநாஸனம்
மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா. "

மஹாலக்ஷ்மி அஷ்டகத்தினைச் சொல்லி மனப்பூர்வமாகத் துதிப்பவர் எல்லா இடர்களையும் வென்று மனோராஜ்யங்களை அடைந்தவராகி இருப்பர்.  தினமும் ஒரு முறை சொல்லி வழிபடுபவரின் பெரும் பாப வினைகள் அழியும். தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில் தனமும் தான்யமும் குறைவின்றி நிறைவாக விளங்கும். தினமும் மூன்று  முறை சொல்லி வழிபடுபவர் (ஐம்புலன் எனும்) எதிரிகளை எளிதாக வெல்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பேரருளைப் பெற்று உய்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மி அவர் நெஞ்சகத்தில் நிலைத்து நிற்பாள்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:

இதி ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் சம்பூர்ணம்

Tuesday, 25 October 2016

அம்மன் பாடல் வரிகள்

அம்மன் பாடல் வரிகள்


அணுவிற்குள் அணுவும் நீ 
அண்டங்கள் அனைத்தும் நீ
ஆள்கின்ற அரசியும் நீ
கணுவிற்குள் கணுவும் நீ 
கரும்புக்குள் சுவையும் நீ
கருணைக்கு எல்லையும் நீ
விண்ணும் நீ மண்ணும் நீ 
விகசிக்கும் ஒளியும் நீ
வேதத்தின் மூலமும் நீ
பண்ணும் நீ பனுவல் நீ 
 புலவர்க்கு பொருளும் நீ
பாருக்கு அன்னையும் நீ
அகிலம் எல்லாம் போற்றும் அகிலாண்ட நாயகியே
அன்புவடி வான உமையே
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

கன்றுக்கு பசுவாக குன்றுக்கு ஒளியாக
என்றைக்கு நீ வருவாய்?
மன்றாடும் பிள்ளைக்கு குன்றாத அன்பதனை
என்றைக்கு நீ தருவாய்?
மண்ணுக்கு மழையாக விண்ணுக்கு நிலவாக
என்றைக்கு நீ வருவாய்?
கண்ணுக்குள் ஒளியாக நெஞ்சுக்குள் சுடராக
என்றைக்கு நீ ஒளிர்வாய்?
இருளுக்குள் அகப்பட்டு பலவாறு வதைபட்டு
ஒளிஉன்னைத் தேடி வந்தேன்
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

விழியுண்டு ஒளியில்லை இருளுண்டு விளக்கில்லை
வழிகாட்ட நீ வருவாய்
விதியுண்டு கதியில்லை மருளுண்டு தெளிவில்லை
மருள்நீக்க நீ வருவாய்
நதியுண்டு நீரில்லை நிலமுண்டு பயிரில்லை
வளம்சேர்க்க நீ வருவாய்
சதிசெய்யும் மதியுண்டு மதிசெய்யும் வலியுண்டு
வலிதீர்க்க நீ வருவாய்
கதியென்று யாருண்டு உனையன்றி எவருண்டு
காப்பாற்ற நீ வருவாய்
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

வேரற்ற மரமாகி வீழ்ந்து விட்டேன் அம்மா
வேராக நீ வருவாய்
நோயுற்ற உயிராகி நொந்து விட்டேன் அம்மா
மருந்தாக நீ வருவாய்
பாதையற்ற வழியில் பயணிக் கின்றேனம்மா
பாதையாய் நீ வருவாய்
நாதியற் றிவ்வுலகில் நலிந்து விட்டேனம்மா
நலம்செய்ய நீ வருவாய்
பேதையென் குரல் கேட்டும் பேசாமலிருப்பதுவும்
தாயுனக் கழகுதானோ?
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

ஏதொன்றும் அறியாமல் நான்செய்த பிழைய                        
[07:27, 10/26/2016] +91 99944 36909: பொறுத்தருள வேண்டுமம்மா
தீதென்று அறியாமல் தீவினையில் வீழ்ந்தஎன்னை
காத்தருள வேண்டுமம்மா
அகிலங்கள் அனைத்துக்கும் அன்னையே உன்னையே
சரணென்று பணிந்து விட்டேன்
ஆகாய கங்கையென பொங்கிவரும் உன்கருணை
மழைநனைய வந்து விட்டேன்
நொடியு மகலாதஅன்பை யுந்தன்திரு வடிகளிலே
தந்தெனக்கு அருளிடு வாய்
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே                        
[07:41, 10/26/2016] +91 99944 36909: மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ

வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி
காணும் பொருளில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி
நான்முகன் நாயகி மோகனரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்
கான மனோகரி கல்யாணி

அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

Sunday, 23 October 2016

சக்தி மந்திரம்

கீழ்வரும் சுபமந்திரத்தை அனுதினமும்"இருட்டறையில்" 1 மணி நேரம் உச்சரிக்க வேண்டும். இதனால் நமக்கேற்படும் "நற்பயனும் பலனும்"மனம் ஒரு நிலைப்படும். துயரங்களேற்பட்டாலும் ஒரு சிலமணி நேரங்கள்தான்நீடிக்கும். அடுத்த மணி நேரத்திற்குள் அத்துயரங்களை துரத்தி மனதுக்கு சாந்த நிலையைத் தருவது மட்டுமல்லாமல், நமக்கேற்பட்ட ஏற்படவிருக்கின்ற பகையாளிகள், நம்மையெதிர்த்து நமக்கு தீங்கு விளைவிக்க மாட்டார்கள். எப்படி? இச் சுபமந்திரத்தை சித்தி செய்வதின் மூலமே ! நமக்கு இன்னார் தான் பகையாளிகள் என்றறிந்தால்,அவர்களை நேருக்குநேர் அவர் கண்களை உற்று நோக்கி கலந்துரையாடல் செய்தோமானால், அவர் உயிர்காப்பான் தோழனாக மாறிவிடுவார்கள். வீம்பான பகையாளிகளை நட்புறவுக் கொள்ள பயன்கொள்ள வேண்டாம். நம்மோடு நகமும் சதையுமாக பலகாலம் உறவோடிருந்து, வேண்டாதவர்கள் செய்த கலகத்தினால் பகைப் பெற்று பிரிந்தார்களே! அவர்களுக்காப் பயன்படுத்தி, அவர்கள் மீண்டும் நட்பானதும் பகைக்கான காரணத்தை விளக்கிச் சொன்னால் எடுத்துக் கொள்வார்கள். இச்சுபமந்திரம் சித்தியாக "இருட்டறை அப்பியாசம்" என்று பெயர். இச்சுபமந்திரத்தை உச்சரித்து ஜெபிக்க எண்ணிக்கையோ, காலஅளவோ கிடையாது. ஜெபம், அனுதினமும் செய்ய செய்ய, ஒரு சிறு ஒளி நம் கண்முன்னே தோன்றும் வரை செய்ய வேண்டும்.

சுபமந்திரம்

ஓம்சக்தி உலகசக்தி ஆதிசக்தி ஆக்ஞாசக்தி
சிவசக்தி சித்தசக்தி வாக்குசக்தி வசியசக்தி
எண்ணிய எண்ணம் எண்ணிய படியே என்னைப் பகைத்தோர்
எனக்குற வாகவே என்னை நினைத்தோர் என்வசமாகவே இசைந்துநடக்க நானே நீயாய் நீயே செய்செய்

குறிப்பு: கீழ்த்தரமான தகாத எண்ணங்கொண்டு இச்சுபமந்திரத்தைப் பிரயோகிக்க எண்ணுபவர்கள், சித்தர்கள், ரிஷிகள், ஞானிகளின் சாபத்திற்காளாக நேரிடும் என்று மனதில் நினைவுக் கொள்ள வேண்டும்.

Monday, 3 October 2016

சுண்டல்

நவராத்திரி சிறப்பு 16வகையான சுண்டல் வகைகள் மற்றும் தேங்காய் பாயாசம் செய்வது பற்றி பார்ப்போம்

மகிழ்ச்சியான நேரம் சூழ்ந்த இந்த நாட்களில் உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உங்கள் பொன்னான கைகளால் பக்குவத்துடன் இந்த சுண்டல் வகைகளை தினமும் ஒன்று வீதம் செய்து அவர்களுக்கு தந்து சாப்பிட செய்து அவர்கள் பாராட்டை அள்ளிச் செல்லுங்களேன்

நவராத்திரி ஸ்பெஷல் தேங்காய் பாயசம்

நவராத்திரிக்கு படைக்கும் நைவேத்தியங்களை பற்றி பார்க்கலாம்.

இன்று தேங்காய் பாயசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பச்சரிசி - ஒரு கப்
வெல்லம் - முக்கால் கப்
ஏலக்காய் - 2
நெய், முந்திரி, திராட்சை - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - ஒரு கப்

செய்முறை :

* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து வைக்கவும்.

* வெல்லத்தை துருவி வைக்கவும்.

* பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவையுங்கள்.

* ஊறவைத்த பச்சரியுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். தண்ணீர் நன்றாகக் கொதிக்கும்போது அரைத்துவைத்திருக்கும் பச்சரிசி தேங்காய் கலவையை அதில் சேர்த்துக் கைவிடாமல் கட்டியில்லாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

* நன்றாக வெந்ததும் வறுத்த வைத்துள்ள முந்திரி, திராட்சையை சேருங்கள்.

* அடுத்து அதில் துருவிய வெல்லம் சேர்த்துக் கரைந்ததும் இறக்கிவையுங்கள்.

* விரும்பினால் ஆறியதும் சிறிதளவு பால் சேர்க்கலாம்.

* இனிப்பான தேங்காய் பாயசம் ரெடி.

நவராத்திரி சுண்டல் வகைகள்  ஸ்பெஷல்:
1. கொண்டைக்கடலை ஃப்ருட் சுண்டல்

என்னென்ன தேவை?

முளைகட்டிய வெள்ளை கொண்டக்கடலை-ஓரு கப்,
ஆப்பிள்(சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்)-ஒன்று,
மாதுளை முத்துக்கள்-2 டேபிள்ஸ்பூன்,
திராட்சைப்பழம்-20,
வாழைப்பழம்(சிறிய துண்டுகளாக நறுக்கிக்  கொள்ளவும்)-ஒன்று,
சாட் மசாலா-ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு- ஒரு டேபிள்ஸ்பூன்,
தேன்-ஒரு டீஸ்பூன்,
உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

முளைகட்டிய கொண்டக்கடலையை சிறிதளவு உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து ஆவியில் வேக விடவும். ஒரு  பாத்திரத்தில் வெந்த கடலை, நறுக்கிய ஆப்பிள் துண்டுகள், வாழைப்பழத் துண்டுகள், மாதுளை முத்துக்கள், திராட்சை, சாட் மசாலா, எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து நன்கு கலக்கினால் டேஸ்டி கொண்டக்கடலை-ப்ருட் சுண்டல் ரெடி இது, டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு.

2. சிவப்பு சோயா சுண்டல்

என்னென்ன தேவை?

உரித்த சிவப்பு சோயா பீன்ஸ்-ஒரு கப்,
இஞ்சி துருவல்-ஒரு டீஸ்பூன்,
கீறிய பச்சை மிளகாய்-2,
கரம் மசாலாத்தூள்-ஒரு  டீஸ்பூன்,
பட்டை-சிறிய துண்டு,
சோம்பு-கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

உரித்த சிவப்பு சோயா பீன்ஸை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, சோம்பு, பச்சை மிளகாய் தாளித்து..... இஞ்சித் துருவல், வெந்த சோயா பீன்ஸ் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

3. ஸ்வீட் கார்ன் சுண்டல்

என்னென்ன தேவை?

ஸ்வீட் கார்ன்-1 கப்,
பச்சை மிளகாய்-2,
புதினா, கொத்தமல்லி-சிறிதளவு,
சோம்பு-கால் டீஸ்பூன்,உப்பு, தேங்காய் துருவல்-3, டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

ஸ்வீட் கார்னை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, தாளித்து வெந்த கார்ன், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, நறுக்கிய கொத்தமல்லி, புதினா, தேங்காய் சேர்த்துக் கிளறி இறக்கினால் டேஸ்டி கார்ன் சுண்டல் தயார்.

4. பட்டர் பீன்ஸ் சுண்டல்

என்னென்ன தேவை?

உரித்த பட்டர் பீன்ஸ்- ஒரு கப்,
சோம்பு-கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை-சிறிதளவு,
கரம் மசாலாத்தூள்-ஒரு டீஸ்பூன்,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
இஞ்சித் துருவல்-ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு- தேவையான அளவு.

எப்படி செய்வது?

உரித்த பட்டர் பீன்ஸை உப்பு சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சோம்பு, கறிவேப்பில்லை, இஞ்சித் துருவல் தாளித்து வெந்த பட்டர் பீன்ஸ், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

5. பச்சைப்பயறு பனீர் சுண்டல்

என்னென்ன தேவை?

முளைகட்டிய பச்சைப்பயறு-ஒரு கப்,
பனீர் துருவல்-முக்கால் கப்,
இஞ்சித் துருவல்- ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள்-ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய்-2, சீரகம்-கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு- தேவையான அளவு.

எப்படி செய்வது?

முளைகட்டிய பயறை ஆவியில் வேகவுடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சீரகம்,  காய்ந்த மிளகாய் தாளித்து, இஞ்சித் துருவல் சேர்க்கவும். வெந்த பாசிப்பயறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். கரம் மசாலாத்தூள், பனீர் துருவல் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

6. கறுப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்

என்னென்ன தேவை?

கறுப்பு கொண்டைக்கடலை- ஒரு கப்,
சோம்பு-கால் டீஸ்பூன்,
பட்டை-சிறிய துண்டு,
கிராம்பு, ஏலக்காய்-தலா ஓன்று,
புதினா-சிறிதளவு,
காய்ந்த மிளகாய்-3,
தேங்காய் துருவல்-3 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு- தேவையான அளவு.

எப்படி செய்வது?

கடலையை 6-8 மணி நேரம் ஊறவிட்டு, குக்கரில் வேக வைக்கவும். வெந்த கடலையை தண்ணீரை வடியவிட்டு எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, காய்ந்த மிளகாய், சோம்பு, பட்டை,கிராம்பு, ஏலக்காய் தாளித்து, புதினா சேர்த்து வதக்கவும். இதனுடன் வெந்த கடலை, தேவையான உப்பு சேர்த்துக்கிளறி, தேங்காய் துருவலை தூவி இறக்கினால் மசாலா சுண்டல் தயார். விருப்பப்பட்டால் கரம் மசாலாத்தூளும் சேர்க்கலாம்.

7. வேர்க்கடலை சுண்டல்

என்னென்ன தேவை?

பச்சை வேர்க்கடலை-ஒரு கப்,
காய்ந்த மிளகாய்-3,
தனியா-2 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு-தலா ஒரு டீஸ்பூன்,
தேங்காய் துருவல்-2,
டேபிள்ஸ்பூன், கறிவேப்பில்லை, கொத்தமல்லி-சிறிதளவு,
கடுகு, பெருங்காயத்தூள்-தலா கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு- தேவையான அளவு.

எப்படி செய்வது?

பச்சை வேர்க்கடலையை 3 மணி நேரம் ஊறவிவும்.பிறகு, உப்பு சேர்த்து வேகவிடவும். மிளகாய், தனியா,கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பில்லை தாளித்து, வெந்த வேர்க்கடலை, வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லி, தேங்காய் துருவல் தூவி மேலும் சிறிது நேரம்  கிளறி இறக்கவும்.

8. மக்காச்சோள சுண்டல்

என்னென்ன தேவை?

மக்காச்சோளம்-ஒரு கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு,
சீரகம், பெருங்காயத்தூள்-தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை- சிறிதளவு,
தேங்காய் துருவல்- 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்,
உப்பு- தேவையான அளவு.

அரைக்க:

இஞ்சி-சிறிய துண்டு,
பச்சை மிளகாய், பூண்டு பல்-தலா 2,
சோம்பு-கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்.

எப்படி செய்வது?

மக்காச் சோளத்தை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, குக்கரில் வேக வைகடகவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு,உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பில்லை தாளித்து..வெந்த சோளம், அரைத்த மசாலா, உப்புச் சேர்த்து, தண்ணீர் தெளித்து நன்கு கிளறி விடவும். 2 நிமிடம் கழித்து தேங்காய் துருவல்தூவி இறக்கவும்.

9. சோயா பீன்ஸ் சுண்டல்

என்னென்ன தேவை?

வெள்ளை சோயா பீன்ஸ்-ஒரு கப்,
இஞ்சி-பூண்டு விழுது- ஒரு டீஸ்பூன்,
பட்டை-சிறிய துண்டு, கிராம்பு,
ஏலக்காய்-தலா ஓன்று,
மிளகாய்த்தூள்-1 டீஸ்பூன்,
தனியாத்தூள்-அரை டீஸ்பூன்,
கறிவேப்பில்லை, புதினா-சிறிதளவு,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
உப்பு,எண்ணெய்- தேவையான அளவு.

எப்படி செய்வது?

சோயா பீன்ஸ் முதல் நாளே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து... கறிவேப்பில்லை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வேக வைத்த சோயா பீன்ஸ், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து சிறிதளவு ணிசேர்த்துக் கலக்கவும். மசாலா நன்கு கலந்தவுடன் புதினா, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறினால் சத்துமிக்க மசாலா சோயாபீன்ஸ் சுண்டல் ரெடி!

10. பச்சைப்பயறு சுண்டல்

என்னென்ன தேவை?

முளைகட்டிய பச்சைப்பயறு-ஒரு கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம்-தலா கால் டீஸ்பூன்,
இஞ்சித் துருவல்- 2 டேபிள் டீஸ்பூன்,
தேங்காய் துருவல்-2 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் 3, கறிவேப்பில்லை- சிறிதளவு,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

முளைகட்டிய  பச்சைப்பயறை குக்கரில் வேக வைத்து எடுக்கவும் வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, காய்ந்த மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பில்லை சேர்க்கவும். வேக வைத்த பயறு, உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். சத்தாடபச்சைப்பயிறு சுண்டல் ரெடி!

11. தக்காளி சோயா பீன்ஸ் சுண்டல்

என்னென்ன தேவை?

சோயா பீன்ஸ்- ஒரு கப்,
தக்காளிச் சாறு-கால் கப்,
மிளகாய்தூள்-ஒரு டீஸ்பூன்,
சீரகம்- கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை, புதினா-சிறிதளவு,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

சோயா பீன்ஸை 10 மணி நேரம் ஊற வைத்து, பிறகு குக்கரில் வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி சீரகம், கறிவேப்பில்லை, புதினா தாளிக்கவும். தக்காளிச் சாறு, மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். இதில் வெந்த பீன்ஸ், உப்பு சேர்க்கவும். நன்கு கலந்து வந்ததும் தேங்காய் துருவல் தூவி  இறக்கவும். தக்காளி சுவையுடன் வித்தியாசமான சுண்டல் தயார்!

12. கோதுமை சுண்டல்

என்னென்ன தேவை?

முளைகட்டிய கோதுமை- ஒரு கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்-தலா கால் டீஸ்பூன்,
கீறிய பச்சை மிளகாய்-2,
தக்காளி-ஒன்று(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்),
வெங்காயம்-ஒன்று(நறுக்கிக் கொள்ளவும்),
கறிவேப்பில்லை -சிறிதளவு,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

முளைகட்டிய கோதுமையை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பில்லை சேர்த்துக் கிளறவும். வெந்த கோதுமை, உப்பு சேர்த்து, (விருப்பட்டால்) தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். டயாபடீஸ் உள்ளவர்களுக்கும் ஏற்ற சுண்டல் இது.

13. கறுப்பு உளுந்து சுண்டல்

என்னென்ன தேவை?

கறுப்பு முழு உளுந்து-ஒரு கப்,
பச்சை மிளகாய்-2,
இஞ்சி-சிறிய துண்டு, சீரகம், கடுகு-தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை-சிறிதளவு,
தேங்காய் துருவல்-3 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

இஞ்சி, பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். உளுந்தை 8 மணி  நேரம் ஊறவிடவும். பிறகு, குக்கரில் போட்டு வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, கறிவேப்பில்லை தாளித்து வெந்த உளுந்து, அரைத்த இஞ்சி விழுது, உப்பு சோத்து நன்கு கிளறவும். பச்சை வாசனை போனதும், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்த சுண்டல் இடுப்பு எலும்புக்கு பலம் தரும். பெண்களுக்கு ஏற்ற சத்தான சுண்டல் இது.

14. டிரை ஃப்ருட்ஸ் சுண்டல்

என்னென்ன தேவை?

முளைகட்டிய பச்சைப் பயறு-ஒரு கப்,
நறுக்கிய பாதாம், முந்தரி, பிஸ்தா, உலர் திராட்சை-தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
பேரீச்சை-10,
உப்பு- தேவையான அளவு.

எப்படி செய்வது?

முளைகட்டிய பாசிப்பயறை உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து , ஆவியில் வேக வைக்கவும். வெந்த பயறுடன் முந்தரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, நறுக்கிய பேரீட்சை துண்டுகள் சேர்த்து நன்கு கலக்கவும். தேங்காய் துருவல் தூவி அலங்கரிக்கவும்.

15. பார்லி வேர்க்கடலை சுண்டல்

என்னென்ன தேவை?

பார்லி-ஒரு கப்,
வறுத்த வேர்க்கடலை-அரை கப்,
சீரகம், சோம்பு-தலா கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய்-2 நறுக்கிய கொத்தமல்லி-சிறிதளவு,
இஞ்சி துருவல்- அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

ஒரு மணி நேரம் ஊற வைத்த பார்லி, வறுத்த வேர்க்கடலையை உப்பு சேர்த்து ஆவியில் வேக வைக்கவும். எண்ணெயை சூடாக்கி, சீரகம், சோம்பு,பச்சை மிளகாய் தாளிக்கவும். இதனுடன் இஞ்சித் துருவல், வெந்த பார்லி, வேர்க்கடலை சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லி,(விருப்பப்பட்டால்) தேங்காய் துருவல் சேர்க்கவும். கர்ப்பிணி பெண்களுக்கும், நீர் பிரியாமல் சிரமப்படுபவர்களுக்கும் ஏற்ற சுண்டல் இது.

16.ஜவ்வரிசி சுண்டல்

நவராத்திரிக்கு பூஜை செய்யும் போது, பிரசாதமாக ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும். ஜவ்வரிசி சுண்டல் கொடுத்தால் சற்று வித்தியாசமாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி - 1 கப்
பாசிப் பருப்பு - 1/4 கப்
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 3/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

செய்முறை:

* ஜவ்வரிசியை இரவில் படுக்கும் போதோ அல்லது 4 மணிநேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். அதுவும் ஜவ்வரிசி மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும்.

* பாசிப்பருப்பை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்த, பின் அதில் பருப்பு மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பருப்பானது நன்கு வெந்ததும், நீரை வடிகட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஜவ்வரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியைப் போட்டு, குறைவான தீயில் உலர்த்த வேண்டும்.

* பின் அதில் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து ஒருமுறை கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

* கடைசியாக துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், ஜவ்வரிசி சுண்டல் ரெடி!!!

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்

*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் பிறந்த வரலாறு ஒரு பார்வை*.
*அம்பிகையின் துதி நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம். இதை உபதேசித்தவர்-ஹயக்ரீவர். உபதேசம் பெற்றவர்- அகஸ்திய முனிவர். உபதேசம் செய்தவரும் சாதாராணமானவர் அல்ல, உபதேசம் பெற்றவரும் சாதாரணமானவர் அல்ல*.
பிரம்மதேவரிடம் இருந்து அசுரன் ஒருவன் வேதங்களைக் கவர்ந்துகொண்டு போனபோது, மகாவிஷ்ணு ஹயக்ரீவராக (குதிரை முகம் கொண்டவராக) வந்து, அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டார். *ஞானத்தின் வடிவமே ஹயக்ரீவர். அப்படிப்பட்டவர், லலிதா ஸஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்திருக்கிறார். உபதேசம் பெற்ற அகஸ்தியரின் பெருமையோ, அளவில் அடங்காது, அதில் ஒன்றை மட்டும் இங்கே பார்க்கலாம்*.
சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் அங்கு கூடினார்கள். அதன் காரணமாக, வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்தது. அப்போது சிவபெருமான் அகஸ்தியரைத் தென்திசைக்கு அனுப்ப, பூமி சமநிலை பெற்றது. இந்தக் கதை அனைவருக்குமே தெரிந்ததுதான்.
ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமான் முதல் தேவர்கள் வரை அனைவரும் ஒரு பக்கம் இருக்க…. அகஸ்தியர் மட்டும் தென்திசை போனார். அதனால் பூமி சமநிலை ஆனது என்றால் என்ன பொருள்? அந்தப் பக்கம் இருந்த அவ்வளவு பேருக்கும் சமமானவர் அகஸ்தியர் என்பதுதானே இதன் பொருள்? அதாவது, அனைத்து தெய்வங்களுக்கும் சமமானவர் அகஸ்தியர். அப்படிப்பட்ட மகாபுருஷர் லலிதா ஸஹஸ்ரநாமத்தை உபதேசம் பெற்றிருக்கிறார்.
*ஞானத்தின் வடிவமான ஹயக்ரீவர் உபதேசிக்க, அதை அனைத்து தெய்வங்களுக்கும் சமமான அகஸ்தியர் கேட்டிருக்கிறார் என்றால், ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் எந்த அளவுக்கு உயர்ந்ததாக மேன்மையானதாக இருக்க வேண்டும்*.
பதினெட்டு புராணங்களில் ஒன்றாகிய பிரம்மாண்ட புராணத்தில், லலிதோபாக்யானம் என்ற பகுதியில் லலிதா தேவியின் திரு அவதாரமும், சரிதமும் கூறப் படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, அன்னை பராசக்தியின் ஆயிரம் திருநாமங்களைக் கூறும் லலிதா ஸஹஸ்ரநாமம் என்னும் மகோன்னதமான இந்த ஸ்தோத்திரம் உள்ளது. ஹயக்ரீவர் என்ற மகரிஷி (விஷ்ணு அவதாரமாகக் கூறப் படுவதும் உண்டு) அகஸ்திய மகரிஷிக்கு உபதேசம் செய்வதாக 182 1/2 சுலோகங்கள் அடங்கிய இந்த நூல் அமைக்கப்பட்டுள்ளது.
*அகஸ்தியரும், அவரது மனைவி லோபாமுத்திரையும் சக்தி வழிபாட்டு நெறிகளை உருவாக்கிய குருமார்களில் முதன்மையாக வைத்துப் போற்றப் படுபவர்கள்* (லோபாமுத்ரார்ச்சிதா – லோபாமுத்திரையால் அர்ச்சிக்கப் பட்டவள் என்றே ஒரு நாமம் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் உண்டு). தேவியின் கட்டளைக்கிணங்க வாசினி முதலான வாக்தேவதைகளே பிரத்யட்சமாகி இந்த தெய்வீக ஸ்தோத்திரத்தைச் செய்ததாகவும் புராணக் குறிப்பு உண்டு.
இந்த நூலுக்கு எழுதப் பட்டிருக்கும் உரைகளில் தலைசிறந்ததாக விளங்குவது பாஸ்கர ராயர் எழுதிய *சௌபாக்ய பாஸ்கரம்* என்ற உரை. பாஸ்கர ராயர் (பொ.பி* 1690 – 1785) மிகப் பெரிய தேவி உபாசகரும், தத்துவ ஞானியும், அறிஞரும் ஆவார். இவர் மகாராஷ்டிரத்தில் பிறந்து, சிறு வயதிலேயே தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்திற்கு தன் குருநாதரைத் தேடி வந்தடைந்தார். காவிரிக் கரையில் நீண்ட நாள் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த ஊர் பாஸ்கரராஜபுரம் என்று இன்றளவும் வழங்கப் படுகிறது. (* பொ.பி – பொதுயுகத்துக்குப் பின் – Common Era, Circa).
*ஸஹஸ்ரநாம நூல்களிலேயே தனித்துவமும், தனிச்சிறப்பும் மிக்கதாக லலிதா ஸஹஸ்ரநாமம் உள்ளது. அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது*. சாக்த நெறியின் தத்துவங்கள் பெரும் வீச்சோடும், காம்பீர்யத்தோடும் இதில் முன்வைக்கப் படுகின்றன. *வேதாந்த தத்துவ உண்மைகளை மந்திரம், யந்திரம், தந்திரம் ஆகிய நுட்பமான குறியீடுகளாக வெளிப்படுத்துவது சாக்த உபாசனை*. பிரம்ம வித்தை என்று வேதாந்தம் கூறும் உண்மைகளையே சக்தி உபாசகர்கள் ஸ்ரீவித்யை என்று அழைக்கிறார்கள். இந்தக் குறியீடுகளை சூனியத்தில் மிதக்க விடாமல் அவற்றுக்கு அழகும்,முழுமையும் அளிக்கும் விதமாகவும் லலிதா ஸஹஸ்ரநாமம் அமைந்துள்ளது.
*லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு ஒரு குறிப்பிட்ட வடிவமும், அமைப்பும், நடையும் உள்ளது. இதில் திருநாமங்கள் கோர்க்கப் பட்டிருக்கும் வரிசையே ஒரு குறிப்பிட்ட சித்தாந்தக் கருத்தை விளக்குவதாக உள்ளது*.
ஆயிரத்தெட்டு நாமங்களும் கீழ்க்கண்ட வரிசையில் கீழ்க்கண்ட பேசுபொருள்களைக் குறித்து அமைந்திருப்பதாக உரைநூல்களை இயற்றிய பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள் –
*ஸ்ரீமாதாவின் அவதாரம்*
*கேசாதி பாத வர்ணனை* (ஸ்தூல ரூபம்)
*பண்டாசுர வதம்*
*மந்த்ர வர்ணனை* (சூட்சும ரூபம்)
*குண்டலினீ ரூபம்*
*பக்த அனுக்ரஹம்*
*நிர்க்குண உபாசனை*
*சகுண உபாசனை*
*பஞ்சப்ரஹ்ம ரூபம்*
*க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ ரூபம்*
*பீடங்களும், அங்க தேவதைகளும்*
*யோகினீ தியானம்*
*விபூதி விஸ்தாரமும், மார்க்க பேதங்களின் சமரசமும்*
*சிவசக்தி ஐக்கியம்*
தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி அக்னிகுண்டத்தில் அவதரித்தவள் லலிதா தேவி. நான்கு கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மலர்க்கணைகள் ஆகியவற்றை ஏந்தியவள். இந்தப் புராண விளக்கம் தியானத்திற்குரிய தத்துவக் குறியீடாக லலிதா ஸஹஸ்ரநாமத்தின் தொடக்கத்திலேயே வந்து விடுகிறது.
*சிதக்³னிகுண்ட³ ஸம்பூ⁴தா – அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றியவள், ராக³ஸ்வரூப பாசா'ட்⁴யா – ஆசை வடிவான பாசக்கயிற்றை ஏந்தியவள், க்ரோதா⁴கார அங்குசோ'ஜ்வலா – தீமையைப் பொசுக்கும் கோப வடிவான அங்குசத்தை கையில் ஏந்தி ஒளிர்பவள், மனோரூப இக்ஷு கோத³ண்டா³ – மனமாகிய கரும்புவில்லை உடையவள், பஞ்சதன்மாத்ர ஸாயகா – ஐந்து புலன்களாலும் உணரப்படும் ஒலி, தொடுகை, உருவம், ரசம், மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளையும், ஐந்து மலர்க்கணைகளகாக் கொண்டவள்*.
பாசக்கயிற்றால் உயிர்களை ஆசையில் பிணிப்பவளும், பின் தனது அங்குசத்தால் அதனை வெட்டி எறிபவளும் அவளே. மனமாகிய வில்லில் ஐம்புலன்களாகிய மலர்க்கணைகளைப் பொருத்தி தேவி பிரபஞ்ச விளையாட்டு விளையாடுகிறாள்!.
தத்துவ அளவில் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் தூய அத்வைத நிலையில் இருந்தே பாடப்பட்டது என்பது இந்த நாமங்களின் பெருங்கடலின் ஒரு துளியை அள்ளிப் பருகினாலே தெரிய வரும் விஷயம்.
*நிர்த்³வைதா – த்வைதம் எனப்படும் இருமை நோக்கை நீக்குபவள், த்³வைத-வர்ஜிதா – இயல்பாகவே இருமை நிலை இல்லாதவள், ஸாமரஸ்ய பராயணா – சமரசத்தில் நிலைபெற்றவள் என்பனவும் அன்னையின் திருநாமங்களே*.
*இந்த அடிப்படையான சமரச பாவத்துடனேயே ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தை நாம் பாராயணம் செய்யவும், தியானம் செய்யவும் வேண்டும். அப்படி தியானம் செய்பவர்களுக்கு நிர்க்குணமும் சகுணமும், ஞானமும் பக்தியும் கர்மமும், வாமாசாரமும் தட்சிணாசாரமும், யோகமும் போகமும், கோரமும் சாந்தமும், இல்லறமும் துறவறமும் – எல்லாம் அன்னையின் உள்ளத்துக்கு உகந்ததாகவும், எல்லாமாகி இலங்கும் அவளை அடைவதற்கான மார்க்கங்களாகவே திகழும்.*
தத்துவங்களே அன்னையின் இருக்கைகளாகவும் (தத்வாஸனா), காற்சிலம்பின் மணிகளாகவும், கையில் ஏந்தி விளையாடும் பூக்களாகவும், மகா காளிக் கோலத்தில் அவள் அணியும் மண்டையோட்டு மாலைகளாகவும் ஆகிவிடுகின்றன!
அதுவே லலிதா ஸஹஸ்ரநாமம் அளிக்கும் பரவச அனுபவம். இந்த துதியைப் பொருள் உணர்ந்து படிக்கும் போதும், தியானிக்கும் போதும் தர்க்க மனத்தின் எல்லைகளுக்கு அப்பால் அது சுழன்றடித்துச் செல்கிறது. பக்தியுடன் இதைப் பாராயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் ஏதோவொரு நாமம் நம் மனதில் ரீங்கரித்து மொழியின் சாத்தியங்களை மீறி ஒரு ஆன்மிகப் பெருவெளிக்குள் நம்மை அழைத்துச் செல்கிற்து.
*தத்துவங்களின் பெருவெளியாக லலிதா ஸஹஸ்ரநாமம் இருக்கிறது.*
மூலப்ரக்ருதி என்னும் ஆதி இயற்கை வடிவானவள் – மூலப்ரக்ருதி:. இந்த ஆதி இயற்கை வெளிப்பட்டும், வெளிப்படாமலும் உள்ளது – வ்யக்தாவ்யக்த ஸ்வரூபிணி. வெளிப்படும் பேரியற்கை எங்கும் வியாபித்தும் (வ்யாபினீ), பல்வேறு வடிவாகவும் (விவிதா⁴காரா) உள்ளது. இந்த ஆதி இயற்கையை யாராலும் முழுமையாக அறிந்து விட முடியாது. அதற்கு பிரக்ஞை என்னும் முழுமை அறிவு தேவைப் படுகிறது, அந்த அறிவு வடிவானவள் – ப்ரக்ஞான-கன-ரூபிணீ. *இது சாங்கிய தரிசனம்*.
அந்த முழுமை அறிவு அனுபூதியில் கைகூடும்போது, அறிபவன், அறிவு, அறிபடுபொருள் அனைத்தும் ஒன்றாக ஆகி விடுகிறது – த்⁴யான த்⁴யாத்ரு த்⁴யேய ரூபா. தர்மம், அதர்மம் போன்ற இருமை நிலைகள் நீங்கி விடுகின்றன – த⁴ர்மாத⁴ர்ம விவர்ஜிதா. *இது வேதாந்த தரிசனம்*.
பசு'பாச' விமோசனி – பசுக்களாகிய ஜீவர்களின் பாசம் என்னும் தளையை விடுவிப்பவள். சி'வஞான ப்ரதா³யினி – சிவஞானத்தை அளிப்பவள். இது *சைவ சித்தாந்தம்*.
என்ன செய்கிறேன்? எப்படி ஒருவன் சிந்தித்து, தர்க்கித்து அப்படி ஒரு பெயரை உருவாக்க முடியும்? வானத்திலிருந்து நட்சத்திரம் உதிர்ந்து நீர்த்தடாகத்தில் நீலத் தாமரையாக மறுநாள் பூத்தெழுவது போல அது வரவேண்டும். மேகச் சுவர்களைப் பிளந்து மின்னல் சாணிக்குழிக்குள் விழுந்து தங்கத்தூணாக மாறுவது போல வரவேண்டும்… அந்தப் பாறைமீது, தனிமையில். வானம் மோனத்தில் மூழ்கியிருக்கும் நிலவு நாளில். அவள் முகத்தை நினைத்தபடியே இருக்கவேண்டும். அவளையன்றி வேறு எதையும் மனம் தீண்டாத ஒருமை கூடவேண்டும். மனப்பொந்திலிருந்து மின்மினிகள் கிளம்புவது போல ஒருவேளை என்னிலிருந்து அப்போது பெயர்கள் பீரிட்டெழக் கூடும்.
*ஆயிரம் பெயர்கள். ஸஹஸ்ரநாமம். லலிதா ஸஹஸ்ரநாமம் எழுதியவன் அப்படித் தான் அடைந்திருப்பான். ஒவ்வொரு பெயரும் பிறிதில் பிரதிபலிக்கும் ஆயிரம் பெயர்கள். அவை கணந்தோறும் கலந்து பிறக்கும் கோடானுகோடிப் பெயர்கள். அப்பெயர்கள் எல்லாம் இணைந்து ஒன்றாகும் ஒரு பெயர். அப்பெயரில் இல்லாத எதுவுமே எங்குமில்லை. அப்படிப் பட்ட பெயர். அது தான் அவள் பெயர்*

Friday, 5 August 2016

அம்பாளை வணங்க

ॐ வணக்கம்.

• அம்பாளை வணங்க அறியாமை விலகும் 

• ஆனந்தம் பெருகும்

• இருள்கலும்

• ஈசனருள் பெருகும்

• உண்மை விளங்கும்

• ஊழ்வினை துலங்கும்

• எப்போதும் மலர்ந்திருப்பாய்

• ஏகாந்தத்தில் கலந்திருப்பாய்

• ஐம்பூதங்களும் உன்வசமாகும்

• ஒன்றினுள்ளோன்றாவாய் 

 ஓங்காரத்துட்பொ
ருள தானுரைப்பாளே  

•ஒளடதமாயுன்னோய்த்தீர்ப்பாளே

 அ
தே அம்பாளின் மகிமையுமேதானறிவாய்